விரைவுச் செய்திகள்

கண்களோடு விட்டுவிடாதே கனவுகளை!

Saturday, May 22, 2010

சொல்லாத காதலும் சுகமானதே

* என்
இதய இருக்கையில்
அவள்
என்னுடன் இருக்கையில்
நான்
சொல்லாத காதலும் சுகமானதே........

* கண்களின் காவலில்
அவள்
என்
கனவுகளில் வரும்போது
நான்
சொல்லாத காதலும் சுகமானதே.......

* எதிரெதிரே இருந்து கொண்டு
எங்கோ இருப்பது போல்
அவள்
இளமை அழகினை
எண்ணிக் கொண்டிருக்கும் போது
என்னுள்
இதுபோல் கவிதை வரும்போது
நான்
சொல்லாத காதலும் சுகமானதே......

* நான்கு
இதய அறைகளில்
எங்கு நான்
உன்னை வைப்பேன்
தந்துவிட்டேன்
என்
இதயத்தையே!
எடுத்துக்கொள்
என்
இதயத்தை.....
எங்கு வேண்டுமானாலும்
தங்கிக்கொள்
வெளியே மட்டும்
வந்து விடாதே........

மு.திருவேங்கடம் முனுசாமி.......

No comments:

Post a Comment

பார்த்த பக்கங்கள்