விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Saturday, July 9, 2011

விவசாயம்

பசுமை குடில் விவசாயம்பசுமைக் குடில்: நிமிரும் விவசாயம்! அரசு உதவினால் விலைவாசி குறையும்

           கூலியாள் பற்றாக்குறை, தண்ணீர் தட்டுப்பாடு, உரம் மற்றும் பூச்சி மருந்து விலை உயர்வு ஆகியவற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள், வழக்கமான விவசாய முறையில் இருந்து, "பசுமைக்குடில்' விவசாயத்துக்கு மாறியுள்ளனர். இந்த முறையில் நல்ல லாபம் கிடைப்பதாகவும், "அரசு உதவினால், விளைபொருட்களை குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்க முடியும்' என்றும், நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    கோவை மாவட்டத்தில் அன்னூர், கோவில்பாளையம், காரமடை, தொண்டாமுத்தூர், சூலூர், மதுக்கரை உள்ளிட்ட 12 ஒன்றியங்களில், இரண்டு லட்சம் ஹெக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. தண் ணீர் வசதியுள்ள தோட்டங்களில் வாழை, கரும்பு, மஞ்சள் மற்றும் காய்கறி பயிரிடப்படுகிறது. பருத்தி, பயறு, சோளம் உள்ளிட்டவை மானாவாரியாக பயிர் செய்யப்படுகிறது.மழையளவு கடந்த சில ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது. விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை; உரம், பூச்சி மருந்து விலையும் அதிகரித்து விட்டது. தோட் டங்களில் நடவு செய்ய, களை எடுக்க, தண்ணீர் பாய்ச்ச, காய் பறிக்க என்று, எந்த பணிக்கும் ஆட்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை.மில்களில் ரூ.120 முதல் 160 வரை தினக்கூலியாகவும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கஷ்டமில்லாத வேலைக்கு தினம் 80 ரூபாயும் வழங்கப்படுகிறது. இக்காரணங்களால், கோவை மாவட் டத்தில் விவசாய பரப்பு குறைந்து விட்டது.

         இந்நிலையில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் அறிமுகப்படுத் தப்பட்ட பசுமைக்குடில் முறையில் பயிர் செய்வது விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முதன் முதலில், நீலகிரி மாவட்டத் தில் மலர்கள் பசுமைக்குடிலில் வளர்க்கப்பட்டன. அதன்பின், தர்மபுரி மாவட்டத்திலும், பிறகு அவிநாசியிலும் துவங்கியது. தமிழகத்தில் முதன் முறையாக, அன்னூர் அருகே முடுக்கன்துறையில் காய்கறி பயிருக்கு 2,000 சதுர மீட்டரில் பசுமைக்குடில் அமைக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "ஹைபிரீட் விதைகள்' மூலம் தினமும் 100 கிலோ தக்காளி விளைச்சல் எடுக்கப்பட்டது. பசுமைக்குடில் அமைப்பதன் மூலம் அதிக வருவாய் கிடைத் ததால் விவசாயிகள் பலரும் ஆர்வத்துடன் அமைத்து வருகின்றனர்.


          அன்னூர் ஒன்றியத்தில் கடந்த ஆண்டு பொகலூரில் இரண்டு இடங்களிலும், செங் காளிபாளையத்தில் ஒரு இடத் திலும் பசுமைக்குடில் அமைக் கப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பசுமைக்குடில் அமைக்க தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் விண் ணப்பித்தனர்.இதில் இந்த ஆண்டு சாளையூர் மற்றும் ஒட்டர்பாளையத் தில் தலா இரண்டு இடங்களிலும், பசூர், குப்பனூர், பொம் மம்பாளையம், குருக்கிளையம் பாளையம், பொன்னே கவுண்டன்புதூர், பொம்மம்பாளையம், காரேகவுண்டன்பாளையம் ஆகிய 10 இடங்களிலும் பசுமைக்குடில் அமைக்க பணி உத்தரவு வழங்கப்பட்டு, குடில் அமைக்கப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக காரமடை ஒன் றியத்தில் 25க்கும் மேற்பட்ட பசுமைக்குடில்கள் அமைக்கப் பட்டுள்ளன; மேலும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.


        தொண்டாமுத்தூர், சூலூர், பொள்ளாச்சி, சுல்தான் பேட்டை, கிணத்துக்கடவு ஒன் றியங்களில் 400க்கும் மேற் பட்ட விவசாயிகள், பசுமைக்குடில் அமைக்க விண்ணப் பித்துள்ளனர். பசுமைக்குடிலில், இறக்குமதி செய்யப்பட்ட "ஸ்பெஷல் பாலிதீன் சீட்டால்' கொட் டகை அமைக்கப் படுகிறது. இதில் உள்தட்பவெப்பம் சீராக பராமரிக்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது. உயர்ரக விதை பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிக விளைச்சல் கிடைக்கிறது.


       இது குறித்து, செங்காளிபாளையத்தில் பசுமைக்குடில் அமைத் துள்ள விவசாயி சுப்ரமணி கூறியதாவது:பசுமைக்குடிலை 6.5 லட்சம் ரூபாயில் அமைத் துள்ளேன். இதில், பயிரிடப்படும் போது, களைகள் முளைக்க 90 சதவீதம் வாய்ப்பில்லை. சொட்டு நீர் கருவி பயன்படுத்துவதால் ஆள் தேவையும் குறைவு; அதிக அளவில் நோய் தாக்குதலும் இல்லை. இதனால் ரசாயன உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் தேவையும் குறைவு. மேலும், விளைச்சல் அதிகமாக கிடைக் கிறது. வழக்கமாக பயிர் செய்யும் முறையை விட இந்த முறையில் 50 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.பெங்களூருவில் உள்ள விதை கம்பெனியுடன் ஒப்பந் தம் செய்துள்ளோம். அவர்களே நாற்றுக்களை கொடுத்து, தொழில்நுட்பம் கற்றுத்தந்தனர். அவர்களே ஒவ்வொரு வாரமும் வந்து பயிரை கண்காணிக்கின்றனர். உற்பத்தி செய்யும் உயர்ரக தக்காளி விதையை கிலோ 7,000 ரூபாய்க்கு கம்பெனி வாங்கிக் கொள்கிறது. கடந்த ஐந்து மாதத்தில் உற்பத்தியான 20 கிலோ விதைக்கு 1.4 லட்சம் ரூபாய் கிடைத்தது; செலவு போக 70 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது.இவ்வாறு, சுப்ரமணி தெரிவித்தார்.


        தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பிரேம்குமார் கூறுகையில், ""பசுமைக்குடில் அமைக்க ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆயிரம் மீட்டருக்கு 3.25 லட்சம் ரூபாயும், பெரிய விவசாயிகளுக்கு 2.15 லட்சம் ரூபாயும் மானியமாக தரப்படுகிறது. பசுமைக்குடில் அமைத்தால் கூடுதல் வருமானம் பெறலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்