விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Thursday, May 5, 2011

Chronic obstructive pulmonary disease (COPD)

 நெடுங்கால சுவாச அடைப்பு நோய்

     நெடுங்கால சுவாச அடைப்பு நோய் அல்லது நெடுங்கால நுரையீரல் அடைப்பு நோய் அல்லது சிஓபிடி (Chronic obstructive pulmonary disease (COPD)) என்பது, நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி (Chronic bronchitis) மற்றும் காற்றேற்ற விரிவு (emphysema) ஆகிய சுவாசப்பாதைகள் குறுக்கம் அடையும் நோய்களைக் குறிக்கிறது. இந்த நோயில் நுரையீரலுக்குச் செல்லும் மற்றும் நுரையீரலில் இருந்து வெளிச்செல்லும் காற்றின் அளவு மட்டுப்படுத்தப்படுகின்றது, இந்நிலையில் குறுகிய சுவாசம் அல்லது சுவாசப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆஸ்த்துமாவில் இத்தகைய நிகழ்வு ஏற்படினும் நோயால் ஏற்படும் மாற்றங்கள் மீளத்தக்கது, ஆனால் நெடுங்கால சுவாச அடைப்பு நோயில் மாற்றங்கள் மீட்சி அடையாததுடன் நாளுக்கு நாளாக இன்னும் மோசமான நிலைக்குட்படுகின்றது.
சிஓபிடி நச்சு நுண்கூறுகள் கொண்ட காற்றினால் வழமைக்கு மாறான அழற்சி மாற்றம் சுவாசப்பையில் ஏற்படுவதனால் உண்டாகின்றது; பொதுவாக புகையிலை புகைப்பதால் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றதன. பெரிய காற்றுப்பாதைகளில் இவ்வாறான அழற்சி சார்ந்த மறுவினையானது நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி என்றழைக்கப்படுகிறது, குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குச் சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டுப் பின்னர் அடுத்த வருடமும் இவ்வாறே ஏற்பட்டால் அந்த நபர்களுக்கு நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி உண்டு என மருத்துவ ரீதியாக அறுதியிடப்படுகின்றது. காற்றுச் சிற்றறைகளில் (alveoli) இந்த அழற்சியின் விளைவாக நுரையீரலின் இழையங்கள் அழியத் தொடங்கும், இந்தச் செயற்பாட்டுக்கு எம்பிசிமா அல்லது காற்றேற்ற விரிவு என்று பெயர். சிஓபிடியின் இயல்புநிலை நோய்த்தாக்க காலத்தில், திடீரென கடுமையான அறிகுறிகள் காணப்படும், இது தீவிர நோய்ப்பண்பு மிகுத்தல் (acute exacerbations) என்றழைக்கப்படுகின்றது, இவற்றில் பெரும்பாலானவை நோய்த்தொற்று அல்லது வளி மாசடைதல் காரணமாக ஏற்படுகின்றன.
சிஓபிடியின் அறுதியிடல் நுரையீரற் செயற்பாட்டுச் சோதனைகள் மூலம் செய்யப்படுகின்றது. இந்நோயைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய செயல்திட்டங்களாவன: புகைப்பிடித்தலை நிறுத்துதல், தடுப்பூசிகள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் மருந்து சிகிச்சை (பெரும்பாலும் ஒரு இன்ஹேலரைப் பயன்படுத்துவது போன்றவை). ஒரு சில நோயாளிகளுக்கு, நீண்டகால ஒட்சிசன் சிகிச்சை அல்லது நுரையீரல்மாற்றம் ஆகிய சிகிச்சைகள் தேவைப்படக்கூடும்.
உலகளவில், 1990 ஆம் ஆண்டில், உலகெங்கும் மரணம் ஏற்படுவதற்கான காரணங்களில் சிஓபிடி ஆறாவது இடத்தை வகித்தது. புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், பல நாடுகளில் மக்கள்தொகை பரவலில் வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாலும், 2030ஆம் ஆண்டு வாக்கில், இது உலகளவில் மரணம் ஏற்படுவதற்கான நான்காவது காரணமாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஓபிடி நெடுங்கால நுரையீரல் அடைப்பு நோய் (COLD), நெடுங்கால சுவாசப்பாதை அடைப்பு நோய் (COAD), நெடுங்கால மட்டுப்படுத்திய சுவாசக்காற்று (CAL) ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

குறிகள் மற்றும் அறிகுறிகள்

சிஓபிடி-இன் மிகப்பொதுவான அறிகுறிகளில் ஒன்று, மூச்சுப்பற்றாக்குறை (டைஸ்ப்னியா) ஆகும். சிஓபிடியைக் கொண்டிருக்கும் நபர்கள் பொதுவாக இதை: "நான் கஷ்டப்பட்டு மூச்சு விடுகிறேன்" "எனக்கு சுவாசம் போதவில்லை" அல்லது "எனக்கு போதுமான காற்றை என்னால் உள்ளிழுக்க முடியவில்லை" என்றெல்லாம் கூறுகின்றனர். சிஓபிடியால் பாதிக்கப்பட்ட மக்கள், தீவிரமான உடற்பயிற்சியின்போது, அதாவது நுரையீரலின் தேவை மிக அதிகமாக இருக்கும் நேரத்தில், முதலில் டைஸ்ப்னியாவால் பாதிக்கப்படுவார்கள். சில ஆண்டுகள் கழித்து, டைஸ்ப்னியா இன்னும் மோசமாகும், இதனால் எளிய அன்றாட பணிகளைச் செய்யும்போதே அவர்களுக்கு சிரமம் தோன்றும். சிஓபிடியின் தீவிரமான நிலைகளில், டைஸ்பினியா மிகவும் மோசமடைந்து, ஓய்வாக இருக்கும்போது கூட ஏற்படும், மேலும் அது தொடர்ந்து காணப்படும்.
சிஓபிடியின் பிற அறிகுறிகளாவன, சளி அல்லது கோழை உற்பத்தி, மூச்சிழுப்பு, மார்பு இறுக்கம் மற்றும் களைப்பு ஆகியவையாகும்.
மிகவும் தீவிரமான (கடுமையான) சிஓபிடியால் பாதிக்கப்பட்ட நபர்கள் சில நேரம் சுவாச செயலிழப்பை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு நிகழும்போது, சைனோசிஸ் எனப்படும், இரத்தத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும், நீலநிற நிறமாற்றம் உதடுகளில் ஏற்படும். இரத்தத்தில் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு காணப்படுவதால், தலைவலி, மயக்கம் அல்லது திடீர் தசைவலி (ஆஸ்டெரிக்சிஸ்) போன்றவை ஏற்படுகிறது. தீவிரமான சிஓபிடியால் ஏற்படும் சிக்கல் கோர் பல்மோனாலே என்றழைக்கப்படுகிறது, பாதிக்கப்பட்ட நுரையீரல்களின் வழியாக இரத்தத்தை அனுப்ப இதயம் கூடுதலாக இயங்க வேண்டியிருப்பதால் ஏற்படும் சுமையே இந்நிலையாகும். கோர் பல்மோனாலேவின் அறிகுறிகளாவன பெரிஃபெரல் எடிமா, எனப்படும் மூட்டு வீக்கம் மற்றும் டைஸ்பெனியா ஆகியவையாகும்.
சிஓபிடியின் சில அறிகுறிகள் மூலம் ஒரு உடல்நலப்பணியாளர் இதைக் கண்டறியலாம், இவை பிற நோய்களில் காணப்பட்டாலும் கூட இதனை அறிவது எளிது சிஓபிடியைக் கொண்ட சில நபர்களுக்கு இந்த அறிகுறிகள் முற்றிலும் இல்லாமலும் இருக்கலாம். பொதுவான அறிகுறிகளாவன:
 • டாகிப்னியா, வேகமான சுவாசித்தல் வீதம்
 • ஸ்டெதஸ்கோப் மூலமாக கேட்கப்படும்போது, இரைப்பு சத்தம் அல்லது பிற சத்தங்கள் கேட்கப்படுவது
 • மூச்சு உள்ளிழுப்பதை விட மூச்சை வெளிவிடுவது அதிக நேரம் எடுத்துக்கொள்ளுதல்
 • மார்பளவு அதிகரித்தல், முக்கியமாக முன்புறத்திலிருந்து பின்புறத்திற்கான அளவு அதிகரித்தல் (ஹைப்பர்இன்ஃப்ளேஷன்)
 • சுவாசித்தலுக்காக கழுத்துப்பகுதியில் உள்ள தசைகளை அதிகமாக பயன்படுத்துவது
 • உதடுகளை சுழித்து மூச்சிழுத்தல்
 • மார்பளவின் குறுக்கு மற்றும் நெடுக்கு விகிதம் அதிகரிப்பது (அதாவது குடுவையைப் போன்ற மார்பு).

காரணம்

புகை பிடித்தல்

தீவிரமாக புகைப்பிடித்தல் சிஓபிடியின் முதன்மையாக காரணமாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் இல் 80 முதல் 90% சிஓபிடி நோயாளிகளுக்கு இந்நோய் வருவதற்கான காரணம் புகைப்பிடித்தலே ஆகும். சிகரெட் புகையை எதிர்கொள்வது பேக் ஆண்டுகள் அடிப்படையில் அளவிடப்படுகிறது, தினசரி சராசரியாக பிடிக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கையானது புகைப்பிடித்த ஆண்டுகளின் எண்ணிக்கையால் பெருக்கி இது கணக்கிடப்படுகிறது. சிஓபிடி உருவாவதற்கான ஆபத்து, வயது அதிகமாகும் போது அதிகரிக்கிறது மற்றும் மொத்தமாக புகைக்கு ஆளாகும் அளவுடனும் இணைந்துள்ளது. வாழ்நாள் முழுவதும் புகைப்பிடிக்கும் அனைவருக்குமே சிஓபிடி தோன்றும், ஆனால் இந்நோய் வரும் வரை அவர்கள் புகைப்பிடித்தலுடன் தொடர்புடைய, எக்ஸ்ட்ரா பல்மோனரி நோய்களால், (கார்டியோ வாஸ்குலார், நீரிழிவு, புற்றுநோய் போன்றவை) இறந்துவிடாமலிருக்க வேண்டும்.

தொழில்சார்ந்த காரணங்கள்

நிலக்கரி சுரங்கம், தங்கச் சுரங்கம் மற்றும் பருத்தி தொழிற்சாலைகள் மற்றும் கேட்மியம், ஐசோசயனேட்கள் போன்ற தொழிலிடங்களில் இருக்கும் தூசிகள் மற்றும் வெல்டிங் போன்றவற்றிலிருந்து வரும் புகைகள் போன்றவற்றுக்கு கடுமையாகவும் நீண்டகாலமும் ஆளாவதால், புகைப்பிடிக்காதவர்களுக்கு கூட சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்படக்கூடும். புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட, இதுபோன்ற பொருட்கள் மற்றும் வாயுக்களுக்கு ஆளாக நேரிடும் பணியாளர்களுக்கு சிஓபிடி இன்னும் அதிக அளவில் தாக்கக்கூடும். மிக அதிகமான அளவுக்கு சிலிக்கா தூசுக்கு ஆளாவதால் சிலிக்கோசிஸ் நோய் ஏற்படுகிறது, இது ஒரு கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோயாகும், இது சிஓபிடியிலிருந்து வேறுபட்டது. ஆனாலும் குறைந்த அளவு சிலிக்கா தூசுக்கு ஆளாவது சிஓபிடியைப் போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தும். தொழில்சார்ந்த மாசுப்படுத்தும் பொருட்களின் விளைவானது, சிகரெட் புகைத்தலை விட கணிசமான அளவு குறைவான முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதாக தெரிகிறது.

காற்று மாசுபாடு

பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், நகரங்களில் வாழும் மக்களுக்கு, கிராமப்புறங்களில் வாழும் மக்களை விடவும் சிஓபிடி வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. புறநகர்ப்பகுதி காற்று மாசுபாடு சிஓபிடிக்கு மிகவும் முக்கியமான காரணியாக இருக்கக்கூடும், இது நுரையீரல்களின் இயல்பான வளர்ச்சியை மெதுவாக்குவதாக கூறப்படுகிறது, ஆனாலும் இதை உறுதிசெய்ய நீண்டகால ஆய்வு தேவைப்படுகிறது. பல வளரும் நாடுகளில் சமையல் நெருப்பின் புகை (மரம், சாணம் போன்ற உயிரி எரிபொருள்களைப் பயன்படுத்துவதால் பெரும்பாலும் ஏற்படுகின்றன) சிஓபிடி ஏற்படுவதற்கான பொதுவான காரணமாகும், மிகக்குறிப்பாக பெண்களுக்கு.

மரபியல்

மிக அதிக அளவுக்கு புகைக்கு ஆளாவது தவிர, ஒரு நபருக்கு சிஓபிடி வருவதற்கு வேறு சில காரணிகளும் உள்ளன. இந்த காரணியானது, ஜீன் காரணங்களாக இருக்கக்கூடும். புகைப்பிடிக்கும் சிஓபிடி நோயாளிகளின் உறவினர்களுக்கு சிஓபிடி நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம், இது தொடர்பற்ற புகைப்பிடிப்பவர்களை விடவும் அதிகமாகும். சில நபர்களின் நுரையீரல்களை புகையிலை புகைக்கு எளிதாக பாதிப்பைப் பெறக்கூடிய அளவிற்கு மாற்றும் மரபியல் வேறுபாடுகள் பெரும்பாலும் கண்டறியப்படவில்லை.
ஆல்ஃபா 1 ஆன் டிரைஸ்பின் குறைபாடு என்ற மரபியல் நிலை, சிஓபிடியின் 2% நோயாளிகளுக்கு இந்நோய் வர காரணமாக இருக்கிறது. இந்நிலையில், ஆல்ஃபா 1 ஆன்டிரைஸ்பின் புரதத்தை உடலானது போதுமான அளவு உற்பத்தி செய்வதில்லை. ப்ரோடேஸ் நொதிகளான எளடேஸ் மற்றும் ட்ரைஸ்பின், போன்றவற்றிலிருந்து ஆல்ஃபா 1 ஆன்டிரைஸ்பின் நுரையீரலை பாதுகாக்கிறது, இவை புகையிலை புகையின் காரணமாக நுரையீரலில் சுரக்கப்படுகின்றன.

பிற ஆபத்துக் காரணிகள்

உள்ளிழுக்கப்பட்ட மாசுப்பொருட்களின் காரணமாக திடீரென்று காற்றுப்பாதையில் சுருக்கம் ஏற்பட்டதான உணர்வு, ப்ராஞ்சைல் ஹைப்பர்ரெஸ்பான்சிவ்னஸ் என்றழைக்கப்படுகிறது, இது ஆஸ்துமாவில் காணப்படும் ஒரு அறிகுறியாகும். சிஓபிடியைக் கொண்ட பல நபர்களுக்கு இந்த உந்துதல் காணப்படுகிறது. சிஓபிடியில், ப்ராஞ்சைல் ஹைப்பர்ரெஸ்பான்சிவ்னஸ் காணப்படுவது, நோய் மிகவும் முற்றிய நிலையைக் குறிப்பிடுகிறது. ப்ராஞ்சைல் ஹைப்பர் ரெஸ்பான்சிவ்னஸ் என்பது சிஓபிடியின் காரணமாக ஏற்படுகிறதா அல்லது அதன் பக்க விளைவா என்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ச்சியான நுரையீரல் தொற்றுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாமிசத்தில் போன்றவை சிஓபிடி உருவாக காரணமாக இருக்கக்கூடும்.

சுய நோயெதிர்ப்பு நோயாக சிஓபிடி

சிஓபிடியில் சுய நோயெதிர்ப்பு கூறு இருக்கக்கூடும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. சிஓபிடியுடன் உள்ள, புகைப்பிடிப்பதை நிறுத்திய பல நபர்களுக்கு, நுரையீரலில் தொடர்ந்து அழற்சிகள் காணப்படுகின்றன. இந்த தொடர்ந்து நிகழும் வீக்கத்தின் காரணமாக, இந்நோயானது தொடர்ந்து மோசமடையக்கூடும். இந்த தொடர்ச்சியான அழற்சியானது, சுய ஆன்டிபாடிகள் மற்றும் தானியங்கு எதிர்வினை T செல்கள் ஆகியவற்றின் காரணமாக ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

குறைபாட்டின் செயல்முறை

ஆரோக்கியமான நுரையீரல் மற்றும் சிஓபிடி ஆகிய இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டைக் காண்பிக்கும் திசுவின் பெரிதாக்கப்பட்ட காட்சி
நுரையீரலில் சிஓபிடியை புகை மற்றும் பிற உள்ளிழுக்கப்பட்ட துகள்கள் எவ்வாறு ஏற்படுத்துகின்றன என்பது இதுவரை முழுவதுமாக புரிந்துகொள்ளப்படவில்லை. நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான செயல்முறையானது:
 • புகையிலை புகையில் உள்ள கட்டற்ற அணுக்கள் தோற்றுவிக்கும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம்.
 • புகையிலை புகை போன்ற எரிச்சலூட்டும் பொருட்கள் காற்றுப்பாதையில் இருப்பதால் அதை எதிர்த்து உடல் வெளியிடும் எதிர்வினையாக உருவாகும், சைட்டோகைன் வெளியீடு.
 • புகையிலை புகை மற்றும் கட்டற்ற அணுக்கள், ஆன்டிப்ரோடேஸ் நொதிகளான ஆல்ஃபா 1-ஆன்டிட்ரைஸ்பின் போன்றவற்றின் செயல்பாட்டை முடக்குகின்றன, இதனால் ப்ரோடேஸ் நொதிகள் நுரையீரலை சிதைக்கின்றன.

நோய்க்குறியியல்

சிஓபிடி தோற்றங்கள்: கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, எம்பிசீமா

நோய்க்குறியியலில் இரட்டை நிலை கடந்த காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது, விவரங்களுக்கு, ஐக் காணவும். மேலும், சமீபகால ஆய்வுகளில், ஒவ்வொரு நோயாளியும் முன்னதாக முச்சுக்குழாய் அல்லது எம்பிசீமாட்டஸ் நோய்த்தோற்றம் கொண்டவராக வகைப்படுத்தப்படலாம் என்று பல ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை மருத்துவ, செயல்பாட்டு மற்றும் கதிரியக்க பகுப்பாய்வுகளை ஆராய்ந்து அல்லது சுவாரஸ்யமான பயோமார்க்கர்களை ஆய்வு செய்வது மூலமாக கண்டறியலாம். ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு, குறிப்பிட்ட வகையான சுவாசப்பாதை கட்டுப்பாடு முன்னதாகவே இருப்பதற்கான புள்ளிவிவர மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் நூற்றுக்கணக்கான நோயாளிகளைக் கொண்ட தரவுத்தளத்தின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி அமைப்பை ஒரு இலவச ஆன்லைன் பயன்பாடாக பின்வரும் முகவரியில் கிடைக்கிறது:

கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி

நுரையீரல் சிதைவு மற்றும் பெரிய காற்றுப்பாதைகளில் எதிர்வினை உருவாவது ஆகியவற்றினால் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படுகிறது. கடுமையான மூச்சுக்குழாய் அழற்சியானது, மருத்துவ சொற்களில், சளியுடன் கூடிய இருமல் ஆண்டின் 3 மாதங்களுக்கு, தொடர்ச்சியாக 2 வருடங்களுக்கு ஏற்படுவது என்று மருத்துவ சொற்களில் வரையறுக்கப்படுகிறது. நுரையீரலின் காற்றுப்பாதைகளில், கடுமையான மூச்சுக்குழாய் அழற்சிக்கான ஒரு அடையாளமாவது, காற்றுப்பாதையில் உள்ள கோப்லெட் செல்கள் மற்றும் சளி சுரப்பிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் (ஹைப்பர்ப்ளாசியா) அவற்றின் அளவு பெரிதாவதும் (ஹைப்போட்ரோஃபி) ஆகும். இதன் விளைவாக, வழக்கத்தை விட அதிக அளவில் காற்றுப்பாதைகளில் சளி காணப்படுகிறது, இதனால் காற்றுப்பாதை சுருக்கமடைந்து சளியுடன் கூடிய இருமல் ஏற்படுகிறது. நுண்மட்டமாக கவனித்தால் மூச்சுக்குழாய் சுவர்களில் எதிர்வினையாற்றக்கூடிய செல்கள் ஊடுருவுகின்றன. எதிர்வினையானது, சுவர்களில் காயங்களை ஏற்படுத்துகிறது மற்றும் சுவர்களின் தடிமனையும் அதிகரிக்கிறது, இவற்றாலும் காற்றுப்பாதைகள் சுருக்கமடைகின்றன. கடுமையான சுவாசக்குழாய் அழற்சி அதிகரிக்கும்போது, ஸ்குவாமஸ் மெடாபிளாசியா (காற்றுப்பாதையின் உட்பகுதியில் திசுவரிசையில் இயல்புக்கு மாறான மாற்றம் ஏற்படுவது) ஏற்படுகிறது மற்றும் ஃபைரோசிஸ் ஏற்படுகிறது. (இதனால் சுவாசக்குழாய் சுவர்கள் மேலும் தடிமனடைந்து அதில் தழும்புகள் ஏற்படுகின்றன). இந்த மாற்றங்களின் விளைவாக சுவாசமானது கட்டுப்படுத்தப்படுகிறது.
முற்றியநிலையில் சிஓபிடியைக் கொண்ட நோயாளிகளுக்கு, கடுமையான சுவாசக்குழாய் அழற்சியானது "நீலநிற தசைகள் ஏற்படுத்துபவை" என்று குறிப்பிடப்படுகிறது, இதில் எம்பிசீமா இவ்வாறு குறிப்பிடப்படுவதில்லை. ஏனெனில் இவர்களுக்கு தோல் மற்றும் உதடு நீலநிறமாக மாறுதல் (சயனோசிஸ்) ஏற்படுகிறது. ஹைப்போக்ஸியா மற்றும் திரவம் தங்குதல் ஆகியவற்றின் காரணமாக அவை "நீலநிற தசைகள் ஏற்படுத்துபவை" என்ற விளியைத் தோற்றுவிக்கின்றன.

எம்பிசீமா

நுரையீரல் சிதைவு மற்றும் எதிர்வினை ஆகியவற்றின் காரணமாக காற்று திசுக்களளில் (அல்வியோல்லி) எதிர்வினை ஆகியவற்றின் காரணமாக எம்பிசீமா தோன்றுகிறது. எம்பிசீமா என்பது, நுரையீரலில் உள்ள டிஸ்டல்கள் டெர்மினல் ப்ராஞ்சியோல்களின் காரணமாக அவற்றின் சுவர்களில் சிதைவு ஏற்படுவதைக் குறிக்கிறது. காற்றுப்பகுதி சுவர்களில் ஏற்படும் சிதைவுகளின் காரணமாக சுவாசத்தின்போது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்சிஜன் பரிமாற்றத்துக்கான மொத்தப்பரப்பின் அளவு குறைகிறது. மேலும் இது நுரையீரலின் இழுவைத்திறனையும் குறைக்கிறது, இதனால் காற்றுப்பாதையில் இயல்பாகவே இருந்த ஆதரவும் குறைவடைகிறது. இந்த காற்றுப்பாதைகள், பின்னர் மேலும் சிதைவடைந்து கூடுதலாக காற்று போக்குவரத்தைக்க் குறைக்கக்கூடும்.
மூச்சை வெளியிடும்போது, எம்பிசீமாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எதிர்கொள்ளும் முயற்சியானது, அவர்களின் முகத்தில் பிங்க் நிறத்தை ஏற்படுத்துகிறது, எனவே இவர்களைக் குறிப்பிட பொதுவாக "பிங்க் பஃப்பர்ஸ்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

நோய்க்கூறு உடலியல்

காற்றுப்பாதைகளில் ஏற்படும் சுருக்கத்தின் காரணமாக காற்றுக்குழல்களின் (அல்வியோலி) வழியாக செல்லும் காற்றின் போக்குவரத்துக் குறைந்து நுரையீரல்களின் செயல்திறன் குறைவடைகிறது. சிஓபிடியில், மூச்சை வெளிவிடும்போது அதிகப்படியான குறைவு ஏற்படுகிறது, ஏனெனில் மார்பில் உள்ள அழுத்தம் காற்றுப்பாதைகளை விரிவாக்க முயற்சிக்காமல் அதனை சுருக்க முயற்சிக்கிறது. கருத்துரீதியாக, அதிக அழுத்தத்துடன் மூச்சை வெளிவிடும்போது, காற்று போக்கு அதிகரிக்கக்கூடும், இதனால் வெளிசுவாசத்தின்போது, மார்பில் அழுத்தம் அதிகரிக்கிறது. சிஓபிடியில், இம்முறையானது எந்த அளவுக்கு காற்று போக்குவரத்தை அதிகரிக்கிறது என்பதற்கு ஒரு வரம்பு இருக்கிறது, இந்த சூழலுக்கு வெளிசுவாச காற்று போக்கு தடைபடுதல் என்று பெயர்.
காற்றின் போக்குவரத்து வீதம் மிகவும் குறைவாக இருந்தால், சிஓபிடியினால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மூச்சு வெளிவிடுதலை முழுவதுமாக செய்ய முடியாது, அதற்குள்ளாகவே அவர் அடுத்த உட்சுவாசத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இது குறிப்பாக உடற்பயிற்சியின்போது அதிகரிக்கும், ஏனெனில் அந்த நேரத்தில் சுவாசம் மிக அதிகமாக இருக்க வேண்டியிருக்கும். இதனால் அடுத்த சுவாசத்தைத் தொடங்கும்போது, முந்தைய சுவாசத்தின் மீதமான சிறிதளவு காற்று நுரையீரலில் தங்கியிருக்கும். இவ்வாறு நிகழும்போது, நுரையீரலில் உள்ள காற்றின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும், இந்த செயல்முறைக்கு டைனமிக் ஹைப்பர்இன்ஃப்ளேஷன் என்று பெயர்.
டைனமிக் ஹைப்பர்இன்ஃப்ளேஷனானது மூச்சுப் பற்றாக்குறையுடன் நெருங்கிய தொடர்புடையது, இதற்கு டைஸ்ப்னியா என்று பெயர். ஹைப்பர்இன்ஃப்ளேஷன் இருக்கும்போது, சுவாசிப்பது அதிக கடினமாக இருக்கும், ஏனெனில் ஹைப்பர்இன்ஃப்ளேஷனின் காரணமாக முன்பே நுரையீரல் விரிவடைந்திருக்கும்போது, நுரையீரலையும் மார்பு சுவற்றையும் நகர்த்துவதற்கு கூடுதலான முயற்சி தேவைப்படுகிறது.
சிஓபிடியில் ஏற்படும் சுவாசப்பற்றக்குறைக்கான மற்றொரு காரணம், எம்பிசீமாவில் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பரிமாற்றத்திற்கான புறப்பரப்பு மிகவும் குறைவாக இருப்பதே ஆகும். இதன் காரணமாக உடலுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையே ஏற்படும் வாயு பரிமாற்றத்தின் வீதம் மிகவும் குறைவடைந்து குறைவான ஆக்சிஜன் மற்றும் அதிக கார்பன் டைஆக்சைடு அளவு உடலில் ஏற்படக்கூடும். இதை சரிகட்டுவதற்காக, எம்பிசீமாவைக் கொண்டுள்ளவர்கள் வேகமாகவோ அல்லது மிகவும் ஆழமாகவோ சுவாசிக்க வேண்டியிருக்கும், காற்று போக்கு குறைவு அல்லது ஹைப்பர்இன்ஃப்ளேஷன் போன்றவை இருக்கும்போது இதுவும் அதிக சிரமம் மிகுந்ததாக இருக்கும்.
கடுமையான சிஓபிடி இருக்கும் சில நபர்கள் வேகமாக மூச்சு விட்டு சரிகட்டிக்கொள்வார்கள், ஆனாலும் இதன் விளைவாக அவர்களுக்கு டைஸ்பினியாவும் கொண்டிருக்கக்கூடும். மற்றவர்கள், சுவாசப்பற்றாக்குறையைக் கொண்டிருப்பவர்கள் அவர்களின் உடலில் குறைந்த அளவு ஆக்சிஜன் மற்றும் அதிக கார்பன் டைஆக்சைடு நிலைகளும் இருக்க பழகி கொள்கின்றனர், ஆனால் இந்நிலை மெல்ல மெல்ல தலைவலி, மயக்கம் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றுக்கு இட்டு செல்லும்.
மேம்பட்ட சிஓபிடியின் காரணமாக, நுரையீரலைத் தாண்டியும் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும், அதாவது எடையிழப்பு, (காச்சிக்ஸியா), பல்மோனரி ஹைப்பர்டென்ஷன் மற்றும் வலது பக்க இதய செயலிழப்பு (கோர் பல்மோனாலே) ஆகியவை இவற்றில் சில. ஆஸ்டியோபோரோசிஸ், இதயக் குறைபாடு, தசை செயலிழப்பு மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் சிஓபிடியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுவாக ஏற்படுபவையாகும்.

சிஓபிடியின் தீவிர விளைவுகள்

சிஓபிடியின் தீவிர விளைவுகளில், திடீரென்று சிஓபிடியின் அறிகுறிகள் தீவிரமடைவது (மூச்சுப் பற்றாக்குறை, அளவு மற்றும் பீல்கெமின் நிறம்) ஒரு அறிகுறியாகும், இது பெரும்பாலும் ஒருசில நாட்கள் வரைத் தொடரும். இது எதேனும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் அல்லது சுற்றுச்சூழல் மாசுகள் போன்றவற்றால் தூண்டிவிடப்படலாம். தீவிர விளைவுகளில், 25% அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நோய்த்தொற்றுகள் தோற்றுவிக்கின்றன, பாக்டீரியா தொற்றுகள் காரணமாக 25% நோயாளிகள் பாதிப்படைகின்றனர், வைரஸ்கள் மட்டும் 25% காரணிகளாகவும், மற்றொரு 25% பேர் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஆகியவை இணைந்தும் உருவாக்குகின்றன. பல்மோனரி எம்பாலிசம் என்பதும் சிஓபிடியின் காரணமாக தோன்றக்கூடும். தீவிரமடைவதன் காரணமாக காற்றுப்பாதை அழற்சி அதிகரிக்கிறது, இதனால் ஹைப்பர் இன்ஃப்ளேஷன் அதிகரிக்கிறது, காற்று போக்குவரத்தின் அளவு குறைகிறது மற்றும் வாயு பரிமாற்றத்தின் அளவு குறைவடைதல் போன்றவை ஏற்படுகிறது. இது பின்னர் ஹைப்போ வென்டிலேஷன் மற்றும் மெல்ல மெல்ல ஹிப்போக்ஸியா போன்றவற்றையும் தோற்றுவிக்கக்கூடும், இதனால் போதுமானதல்லாத திசு ஊடுருவல் பின்னர் செல் நெக்ரோசிஸ் போன்றவை ஏற்படக்கூடும்.

நோய் கண்டறிதல்

சிஓபிடியின் நோயறிதலானது, டைஸ்ப்னியா, கடும் இருமல் அல்லது சளி உற்பத்தி மற்றும்/அல்லது தொடர்ச்சியான புகையிலை புகைத்தல் போன்ற ஆபத்துக்காரணிகளுக்கு ஆளாதல் போன்ற நோய்கள் இருக்கும் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறியும் அல்லது குறியும் சிஓபிடி நோயறிதலை உறுதி செய்வதோ அல்லது விலக்குவதோ கிடையாது ஆனாலும் சிஓபிடியானது, 40 வயதுக்கு குறைவானவர்களுக்கு வருவது அரிது.

செயற்கை மூச்சுப்பொறி (ஸ்பைரோமெட்ரி)

சிஓபிடியின் நோயறிதலானது, ஸ்பைரோமெட்ரி சோதனையின் மூலம் உறுதி செய்யப்படுகிறது, இந்த சோதனையானது, ஒருவருடைய சுவாசத்தை அளவிடுகிறது. கட்டாயமான வெளிசுவாசத்த்தின் கொள்ளளவு ஒரு விநாடியில் (FEV1) ஸ்பைரோமெட்ரி சோதனையில் அளவிடப்படுகிறது, இதுவே ஒரு பெரிய வெளி சுவாசத்தின் முதல் கணத்தில் இருக்கும் அதிகபட்ச காற்று அளவு ஆகும். ஸ்பைரோமெட்ரி கட்டாயமான முக்கிய கொள்ளளவையும் (FVC) ஸ்பைரோமெட்ரி அளவிடுகிறது, இது ஒரு பெரிய வெளிசுவாசத்தில் முழுமையாக வெளியிடப்படக்கூடிய காற்றின் கொள்ளளவு ஆகும். பொதுவாக எஃப்விசியின் 70% முதல் விநாடியிலேயே வெளிவந்து விடுகிறது (அதாவது எஃப்ஈவி1/எஃப்விசி விகிதம் >70%). சிஓபிடியில், இந்த விகிதம் இயல்பை விடக் குறைவாக இருக்கும், (அதாவது, எஃப்ஈவி1/எஃப்விசி விகிதமானது <70%) இது, ப்ராஞ்சோடிலேட்டர் மருந்து தரப்பட்ட பின்னரும் ஏற்படும்.
சிஓபிடியின் தீவிரத்தை அளவிட ஸ்பைரோமெட்ரி சோதனை உதவக்கூடும். எஃப்ஈவி1 (ப்ராஞ்சோடிலேட்டருக்கு பின்னர்) என்பது, ஒரு நபரின் வயது, பாலினம், உயரம் மற்றும் எடை ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்ட "இயல்பு" மதிப்பின் சதவீதத்தால் அளவிடப்படுகிறது:
சிஓபிடியின் தீவிரம்
எஃப்ஈவி1 கணிக்கப்பட்ட %
லேசானது
≥80
மிதமானது
50–79
கடுமையானது
30–49
மிகவும் கடுமையானது
<30 அல்லது கடும் சுவாச செயலிழப்பு அறிகுறிகள்
சிஓபிடியின் தீவிரமானது, டைஸ்பினியா மற்றும் உடற்பயிற்சி வரம்புகள் ஆகியவற்றின் தீவிரத்தையும் சார்ந்தது. இவையும் பிற காரணிகளும் ஸ்பைரோமெட்ரி முடிவுகளுடன் இணைந்து, சிஓபிடியின் தீவிரத்தன்மை ஸ்கோர் பெறப்படுகிறது, இது நோயின் பலவகையான வடிவங்களையும் கணக்கிலெடுக்கிறது.

பிற சோதனைகள்

அளவுக்கு அதிகமாக விரிவடைந்திருக்கும் மார்பைக் காண்பிக்கும் எக்ஸ் கதிர் படம், பிற நுரையீரல் நோய்களிலிருந்து இதை வேறுபடுத்திக் கண்டறிய உதவக்கூடும். முழுமையான நுரையீரல் செயல்பாட்டு சோதனைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த நுரையீரல் கொள்ளளவு மற்றும் வாயு பரிமாற்ற சோதனைகள் மிகை விரிவாக்கத்தைக் கண்டறிய உதவக்கூடும் மற்றும் அது எம்பிசீமாவுடன் சிஓபிடி இருப்பதையும் அது இல்லாமல் சிஓபிடி இருப்பதையும் கூட வேறுபடுத்திக் காட்டும். மார்பை உயர் தெளிவுத்திறன் கம்ப்யூட்டர் டோமோகிராபி ஸ்கேன் செய்வதன் மூலம் நுரையீரல் முழுவதும் எம்பிசீமா பரவியுள்ளதையும் பிற நுரையீரல் நோய்களிலிருந்து இதனை வேறுபடுத்திக் காண்பிக்கவும் இது உதவும்.
இதய அறை ஒன்றிலிருந்து எடுக்கப்படும் இரத்தத்தில் உள்ள வாயு அளவுகளில் குறைந்த ஆக்சிஜன் நிலையும் (ஹைப்போக்ஸிமியா) மற்றும்/அல்லது அதிக கார்பன் டைஆக்சைடு நிலையும் (சுவாச அசிடோசிஸ்) காண்பிக்கப்படலாம். சிரைகளிலிருந்து எடுக்கப்படும் இரத்த மாதிரியிலும், அதிக இரத்த எண்ணிக்கை (வினைமிகு பாலிசைதிமியா) தோன்றக்கூடும், நீண்டக்கால ஹைப்போக்ஸிமியாவுக்கான எதிர்விளைவு.

நிர்வகித்தல்

தற்போது சிஓபிடிக்கு எந்தவித முழுமையான சிகிச்சைத் தீர்வும் இல்லை, ஆனாலும் சிஓபிடி தடுக்கக்கூடியது மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு குறைபாடே ஆகும். சிஓபிடிக்கான மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் கிளோபல் இனிஷியேட்டிவ் ஃபார் க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் லங் டிசீஸ் (GOLD) என்ற அமைப்பிடமிருந்து கிடைக்கும், இது உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க தேசிய இதய, நுரையீரல் மற்றும் இரத்த மையம் ஆகியவற்றுடன் இணைந்த கூட்டு நிறுவனம் ஆகும். சிஓபிடி நிர்வகிப்பிற்கு தற்போது மிக அதிகமாக செய்யப்படும் வழிகாட்டுதல்களாவன, நோயைக் கண்காணிப்பது மற்றும் மதிப்பிடுவது, நிலையான சிஓபிடியைப் பராமரிப்பது, கடுமையான பக்கவிளைவுகளைத் தடுப்பது மற்றும் சிகிச்சைப் பெறுவது மற்றும் இருநோய்கள் ஒரே சமயத்தில் இருப்பதை நிர்வகிப்பது ஆகியவை ஆகும்.
மரணமடையும் வீதத்தைக் குறைப்பதற்கான ஒரே வழியானது, புகைப்பழக்கத்தை நிறுத்துவதும், போதுமான ஆக்சிஜனை பெறுவதுமே ஆகும்.

ஆபத்துக் காரணி குறைப்பு

புகைப்பிடித்தலை நிறுத்துதல்

சிஓபிடியின் வளர்ச்சியைக் குறைப்பதற்கு புகைப்பிடித்தலை நிறுத்துவது முக்கியமான ஒன்றாகும். சிஓபிடி கண்டறியப்பட்டவுடன், புகைப்பிடித்தலை நிறுத்துவதால், நோய் தீவிரமடையும் வேகம் குறைவடைகிறது. நோய் தீவிரமாக முற்றிய நிலையிலும், நுரையீரல் செயல்பாடு மோசமடைவது கணிசமான அளவு குறைகிறது மற்றும் முடக்கம் மற்றும் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தாமதப்படுத்தப்படுகிறது. சிஓபிடி தீவிரமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே நிலையான கட்டுப்படுத்தல் இதுவே ஆகும்.
புகைப்பிடித்தலை நிறுத்துவது என்பது, ஒரு தனிநபர் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கு தீர்மானிப்பதில் தொடங்கி, அதை முற்றிலும் கைவிடும் முயற்சியில் அடங்கியுள்ளது. நீண்டகாலம் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கு பெரும்பாலும் பல முயற்சிகள் தேவைப்படுகிறது. சில புகைப்பிடிக்கும் நபர்கள், நீண்டகாலம் புகைப்பிடித்தலை நிறுத்தும் நிலையை "மன உறுதியால்" மட்டுமே அடைகிறார்கள். ஆனாலும், புகைப்பிடித்தல் தீவிரமான அடிமைத்தனத்தை தோற்றுவிக்கக்கூடியது, மற்றும் பெரும்பாலான புகைப்பிடிப்பவர்களுக்கு அதை நிறுத்துவதற்கு கூடுதல் உதவி தேவைப்படுகிறது. சமூக ஆதரவு, புகைப்பிடித்தல் நிறுத்துதல் திட்டம் மற்றும் நிகோடின் மாற்றீடு சிகிச்சை, ப்யுரோபியோன் மற்றும் வேரனிக்லைன் ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தல் ஆகியவற்றின் மூலமாக வெற்றிகரமாக புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
அரசாங்க கொள்கைகள், பொது உடல்நல முகமைகள் மற்றும் புகைத்தல் எதிர்ப்பு அமைப்புகள் போன்றவை புகைப்பிடித்தலை நிறுத்துவதை ஊக்குவிப்பது மற்றும் அதனை தொடங்குவதை கண்டிப்பது ஆகியவற்றின் மூலமாக புகைத்தல் வீதங்களைக் குறைக்கலாம். சிஓபிடியைத் தடுப்பதில் உள்ள செயல்திட்டங்களுக்கு இந்த கொள்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தொழில்ரீதியான உடல்நலம்

நிலக்கரி சுரங்கங்கள் போன்ற சிஓபிடி ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இதன் ஆபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கலாம். இந்த நடவடிக்கைகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்: பணியாளர்கள் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றுக்கு ஆபத்துக்கள் பற்றிய அறிவை கற்பித்தல் புகைத்தலை நிறுத்துதலை விளம்பரப்படுத்துதல், சிஓபிடிக்கான அறிகுறிகள் உள்ளதா என மேற்பார்வையிடுதல், தனிநபர் தூசு மானிட்டர்களைப் பயன்படுத்துதல், சுவாச உதவிகள் மற்றும் தூசு கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்துதல். காற்று போக்குவரத்தை அதிகமாக்குதல், நீர் தூவிகளைப் பயன்படுத்துதல் மற்றும் மாசு உருவாக்கத்தை குறைக்கும் சுரங்கம் தோண்டுதல் நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக தூசுக் கட்டுப்பாட்டை அடைய முடியும். ஒரு பணியாளுக்கு சிஓபிடி தோன்றினால், தொடர்ச்சியாக தூசுக்கு ஆளாவதைத் தடுப்பதன் மூலமாக நுரையீரல் சிதைவைக் குறைக்கலாம், எடுத்துக்காட்டாக பணிப் பொறுப்பை மாற்றலாம்.

காற்று மாசுபாடு

மாசு தடுப்பு முயற்சிகள் மூலமாக காற்றின் தரத்தை மேம்படுத்தலாம், இது சிஓபிடி கொண்ட நபர்களுக்கு நன்மையளிக்கும். சிஓபிடியைக் கொண்ட ஒரு நபர், காற்று மாசுபாடு அதிகமுள்ள நாட்களில், உள்ளிடங்களிலேயே தங்கியிருப்பதன் மூலமாக குறைவான அறிகுறிகளைப் பெற முடியும்.

நிலையாக சிஓபிடியை நிர்வகித்தல்

மூச்சுக்குழாய் அழற்சி இளக்கிகள்

மூச்சுக்குழாய் அழற்சி இளக்கிகள் என்பவை காற்றுப்பாதைகளைச் சுற்றியுள்ள தசைகளை மிருதுவாக்கும் மருந்தாகும், மற்றும் மூச்சுப்பாதைகளின் திறனை அதிகப்படுத்துவதும் மற்றும் காற்று போக்கை அதிகரிக்கவும் உதவுவதுமாகும். இவை மூச்சு பற்றாக்குறையின் அறிகுறிகளைக் குறைக்கும், மூச்சிழுப்பு மற்றும் உடற்பயிற்சி வரம்புகளைக் குறைக்கும், இதனால் சிஓபிடியைக் கொண்ட நபர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படக்கூடும். இவை நோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில்லை. மூச்சுக்குழாய் அழற்சி இளக்கிகள் பொதுவாக ஒரு இன்ஹேலர் அல்லது ஒரு நெபுலைசைர் ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
மூச்சுக்குழாய் அழற்சி இளக்கிகள் என்பவை, β2 அகோனிஸ்ட்ஸ் மற்றும் ஆன்டிக்ளோனினெர்ஜிக்ஸ் ஆகிய இரண்டு முதன்மையான வகைகள் உள்ளன. ஆன்டிக்ளோனினெர்ஜிக்ஸ் ஆகியவை β2 அகோனிஸ்ட்களை விட சிஓபிடிக்கு எதிராக அதிக தீவிரமுடையவையாக உள்ளன. ஆன்டிக்ளோனினெர்ஜிக்ஸ் சுவாசக்குழாய் மரணங்களைக் குறைக்கின்றது, அதேபோல் β2 அகோனிஸ்ட்ஸ் சுவாசக்குழாய் மரணங்களுக்கு எதிராக விளைவுகள் அற்றதாக உள்ளன. ஒவ்வொரு வகையும், நீண்டகாலம் செயல்புரிவதாகவும் (12 மணிநேரம் அல்லது அதைவிட நீண்டகாலம் நிலவும் விளைவு கொண்டது) அல்லது குறுகிய காலம் செயல்புரிவதாகும் (விரைவாக விளைவை தந்துவிடக்கூடியது, நீண்டகாலம் நீடிக்கக்கூடியது அல்ல).
β2 அகோனிஸ்ட்ஸ்
β2 அகோனிஸ்ட்கள் β2 ஏற்பிகளை காற்றுப்பாதையில் தூண்டிவிடுகிறது, இதனால் தசைகள் மிருதுவாகி ஓய்வாக உணர முடிகிறது. ஏராளமான β2 அகோனிஸ்ட்கள் கிடைக்கின்றன. அல்புடெரால் (பொதுவான பிராண்ட் பெயர்: வெண்டோலின்) மற்றும் டெர்ப்யுட்டாலின் ஆகியவை குறுகிய காலம் செயல்புரியும் β2 அகோனிஸ்ட்கள் மற்றும் விரைவாக சிஓபிடி அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. சல்மெட்ரோல் மற்றும் ஃபோர்மோட்ரால் போன்ற நீண்டகாலம் செயல்புரியும் β2 அகோனிஸ்ட்கள் மேம்பட்ட காற்றுப்போக்கை பராமரித்தல் சிகிச்சை, உடற்பயிற்சி திறன் மற்றும் வாழ்க்கைத் திறன் ஆகியவற்றை தரப் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆன்டிகோலினெர்ஜிக்ஸ்
ஆன்டிகோலினெர்ஜிக் மருந்துகள், க்ளோனெர்ஜிக் நரம்புகளிலிருந்து வரும் தூண்டுதல்களைத் தடுப்பதன் மூலம் காற்றுப்பாதை தசைகளைத் தளர்வடைய வைக்கிறது. இப்ராட்ரோபியம் என்பது மிகவும் பரவலாக பரிந்துரைக்கப்படும் குறுகியகாலம் செயல்படும் ஆன்டிகோலினெர்ஜிக் மருந்தாகும். விரைவில் செயல்புரியும் β2 அகோனிஸ்ட்கள் போலவே, குறுகிய காலம் செயல்படும் ஆன்டிகோலினெர்ஜிக்ஸ் மருந்துகள் சிஓபிடிக்கு விரைவான நிவாரணம் தருகின்றது, இவை இரண்டும் ஒன்றாக இணைத்து தரப்படும்போது, சிஓபிடிக்கு மிகவும் நல்ல நிவாரணம் கிடைக்கிறது. டயோட்ரோபியம் என்பது சிஓபிடிக்கு பொதுவாக பரிந்துரைக்கப்படும், நீண்டகாலம் செயல்படும் ஆன்டிகோலினெர்ஜிக் மருந்தாகும். இவை எம்3 மியூஸ்கார்னிக் ஏற்பிகளுக்கு அதிக செயல்திறன் மிக்கது, எனவே பிற ஆன்டிகோலினெர்ஜிக் மருந்துகளை விட குறைந்த பக்க விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். தொடர்ந்து பயன்படுத்துவதால், காற்றுப்போக்கு, உடற்பயிற்சி திறன், நல்ல வாழ்க்கை முறை மற்றும் சாத்தியமானால் நீண்டகாலம் வாழுதல் ஆகியவற்றின் சாத்தியங்களை அதிகரிக்கும். ஜனவரி 2010, சிஓபிடிக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இப்ட்ரோபியம் கார்டியோவாஸ்குலார் நோயுறுதல் வீதத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டியோட்ரோபியம் என்ற மருந்து, எல்லா வகையான பக்கவிளைவுகளையும் அகற்றுவதாகவும், கார்டியோவாஸ்குலார் நோயுறுதல் வீதம் மற்றும் கார்டியோவாஸ்குலார் நிகழ்வுகள் ஆகிய அனைத்தையும் அகற்றுவதாகவும் உள்ளது.

நுரையீரல் இயக்க ஊக்கிகள் (கார்டிகோஸ்டீராய்ட்ஸ்)

காற்றுப்பாதைகளில் உள்ள அழற்சியைக் குறைக்க கார்டிகோஸ்டெராய்டுகள் செயல்புரிகின்றன, கருத்து ரீதியாக, நுரையீரல் சிதைவு மற்றும் அழற்சியினால் காற்றுப்பாதை சுருங்குதல் போன்றவற்றை கார்டிகோஸ்டெராய்டுகள் குறைக்கின்றன. சுவாசப்பாதை இளக்கிகளைப் போல, இவை நேரடியாக காற்றுப்பாதை தசையில் செயல்பட்டு அதை தளர்வடைய செய்வதில்லை மற்றும் நோய் அறிகுறிகளிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைப்பதில்லை. பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படும் கார்டிகோஸ்டீராய்டுகளில் சில, ப்ரீட்னிசோன், ஃப்ளக்டிகாசோன், ப்யூடிசோனடு, மோமிடாஸோன் மற்றும் பீக்லோமீத்தசோன் ஆகியவையாகும். கார்டிகோஸ்டீராய்டுகள் மாத்திரை வடிவத்திலோ அல்லது மூச்சில் இழுக்கப்படுவதாகவோ பயன்படுத்தப்படுகின்றது, இது சிஓபிடி கடுமையாக தீவிரமடைவதைத் தடுக்கிறது. லேசான சிஓபிடியைக் கொண்ட நபர்களுக்கு, நன்றாக உள்ளிழுக்கப்பட்ட கார்டிகோஸ்டீராய்டுகள் (ICS) போதுமான அளவு நன்மை அளிப்பதில்லை, ஆனாலும் மிதமான அளவு அல்லது தீவிரமான சிஓபிடியைக் கொண்ட நபர்களுக்கு அவை கடுமையான விளைவுகளைக் குறைக்கின்றன. ஆனாலும் இவை, நோயாளிகள் ஒரு ஆண்டிற்குள் மரணமடைவதற்கான வாய்ப்பைக் குறைப்பதில்லை மற்றும் நிமோனியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதைக் குறைப்பதில்லை.

பிற மருந்துகள்

தியோபைல்லின் என்பது ஒரு சுவாசப்பாதை இளக்கியாகும் மற்றும் பாஸ்போடைஸ்டெரேஸ் முடக்கியாகும், இதனை சிஓபிடியைக் கொண்ட நபர்களுக்கு தருவதன் மூலம் அதன் அறிகுறிகளைக் குறைக்கலாம். பெரும்பாலும், வாந்தி ஏற்படும் உணர்வு மற்றும் இதயத்தின் வரம்பு மீறி பயன்படுத்துவதற்கான தூண்டுதல் ஆகியவை பக்க விளைவுகளாகும். குறைந்த மருந்தளவுகளில் தந்தால், இது சிஓபிடியின் தீவிரவிளைவுகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்துகிறது. சோதனை முயற்சியில், பாஸ்போடைஸ்ட்ரேஸ்-4 ஆன்டிஅகோனிஸ்ட்களான ரோஃப்ளூமிலாஸ்ட் மற்றும் சிலோமிலாஸ்ட் ஆகியவை இரண்டாம் நிலை மருத்துவ சோதனைகளை முடித்துவிட்டன. இன்ஃப்ளக்ஸிமாப் போன்ற கட்டி செல் இறப்பு ஆன்டிஅகோனிஸ்ட் காரணிகள் நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கி, அழற்சியை குறைக்கின்றன. இன்ஃப்ளக்ஸிமாப் சிஓபிடி உள்ளவர்களுக்கு சோதிக்கப்பட்டதில், ஆபத்து நேரும் வாய்ப்புடன் கூடவே எந்த வகையில் நன்மை ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் காட்டப்படவில்லை.

போதுமான அளவு ஆக்சிஜன்


ஆக்சிஜனை பல வேறுபட்ட வடிவங்களை வழங்க முடியும்: பெரிய கொள்ளளவுகளில், நீர்ம ஆக்சிஜனைக் கொண்ட சிறிய கொள்ளளவுகளில், அறையின் காற்றிலிருந்து ஆக்சிஜனை ஈர்க்கக்கூடிய ஆக்சிஜன் அடர்த்தியாக்கிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக (இங்கு காட்டப்பட்டுள்ளது).பிந்தைய இரண்டு வாய்ப்புகளும், நபர்கள் நகரும் தன்மையை அதிகரித்து, நீண்டகால ஆக்சிஜன் சிகிச்சையின் தேவையை அதிகரிக்கிறது.
சிஓபிடியைக் கொண்ட நபர்களுக்கு போதுமான ஆக்சிஜன் தரப்படலாம். ஆக்சிஜன் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் அல்லது ஒரு ஆக்சிஜன் அடர்த்தியாக்கி ஆகியவற்றிலிருந்து தரப்படலாம், இதற்கு மூக்கு வழியான குழாய் அல்லது ஆக்சிஜன் முகமூடி போன்றவைப் பயன்படுத்தப்படலாம். போதுமான ஆக்ஸிஜன் தரப்படுவது, மூச்சுப்பற்றாக்குறையைப் போதுமான அளவு அதிகரிப்பதில்லை ஆனால், சிஓபிடியைக் கொண்ட நபர்கள், அதிக உடற்பயிற்சி மற்றும் வீட்டு செயல்களை செய்வதற்கு இது உதவக்கூடும். குறைந்தபட்சம் 16 மணிநேரத்துக்கு நீண்டகால ஆக்சிஜன் சிகிச்சை தரப்பட்டால், சிஓபிடியைக் கொண்ட நபர்களுக்கு வாழ்க்கைத் தரம் மேம்படுவதுடன் ஏட்ரியல் ஹப்போசெக்மியாவின் சிக்கல்களான நுரையீரல் மீஅழுத்தம், கோர் பல்மோனாலே, அல்லது இரண்டாம் நிலை எரித்ரோசைடோசிஸ் போன்றவை கொண்ட நபர்களின் உயிர்வாழ்தல் காலத்தையும் மேம்படுத்தும். கடுமையான சிஓபிடியைக் கொண்ட சில நபர்களுக்கு, தேவையான ஆக்சிஜன் அதிக அளவில் இருப்பதால், கார்பன் டைஆக்சைடு தேங்குவதும், சுவாசப்பாதை அசிடோசிஸ் ஏற்படவும் நேரிடும்; இந்நபர்களுக்கு குறைந்த ஆக்சிஜன் போக்கு வீதங்கள் பொதுவாக நல்லதாகும்.

நுரையீரல் சீரமைப்பு

உடற்பயிற்சி, நோய் மேலாண்மை மற்றும் தனிநபருக்கு நன்மை பயக்கும் விதமான ஆலோசனைகள் ஆகியவை இணைந்த திட்டமே நுரையீரல் சீரமைப்பு ஆகும். நுரையீரல் சீரமைவு திட்டத்தினால் மூச்சுப்பற்றாக்குறை மற்றும் உடற்பயிற்சித் திறன் ஆகியவை மேம்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பயிற்சியினால் நோயாளிக்கு, அவருடைய நோயை மற்றும் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடிவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

உணவூட்டம்

எடை குறைவாகவோ அல்லது எடை மிகவும் அதிகமாகவோ இருப்பது நோயை அதிகரிக்கக்கூடும் என்பதாலும், நோய் முன்னறிதலை பாதிக்கும் என்பதாலும். சிஓபிடியைக் கொண்ட எடைக் குறைவான நபர்கள், அவர்களின் தசை வலுவை அதிகமான கலோரிகள் உண்பதன் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம். வழக்கமான உடற்ப்யிற்சியுடன் இணைத்து, அல்லது நுரையீரல் சீரமைப்பு திட்டத்துடன் இணைத்து இதை செய்யலாம். இதனால் சிஓபிடியின் நோய்த்தாக்கம் மேம்படக்கூடும்.

குளிர் காலநிலை பாதுகாப்பு


சுவாசச் சிக்கல்களைக் கொண்ட நபர்களுக்கு ஏற்படும் முக்கியமான குளிர்கால ஆபத்தானது, குளிர்ந்த காற்றை சுவாசிக்க நேர்வதாகும். சிஓபிடியைக் கொண்ட பல நபர்களுக்கு, குளிர்ந்த காற்றை சுவாசிப்பதால், மூச்சிறைப்பும் அதிகமான சுவாசமற்ற நிலையும் ஏற்படுகிறது.
இந்த அறிகுறிகளை சரியாக அறிந்து, குளிர்ந்த காற்றைச் சுவாசிப்பதிலிருந்து தடுப்பதன் மூலமாக குளிர்காலத்தில் சுவாச சிக்கல் கடும் விளைவுகளை நாம் கட்டுப்படுத்த முடியும். கடும் விளைவுகள் குளிர்மாதங்களில் பொதுவாக காணப்படுகின்றன, மற்றும் சிஓபிடி நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் வழிவகுக்கின்றன.
பொதுவான ஜலதோஷம் அல்லது சுவாசக் குழாய்களை பாதிக்கும் பிற நோய்த்தொற்றுகள் போன்றவையும் ஒரு சிஓபிடி நோயாளிக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். பல சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் எளிதில் பரவக்கூடியவை. ஆண்டின் மற்ற காலங்களை விட, குளிர்காலத்தின்போது, சாதாரண ஜலதோஷம் மற்றும் மேல் மூச்சுக்குழல் நோய்த்தொற்றுகள் ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
சிஓபிடியைக் கொண்ட நபர்களுக்கு, குளிர்காலத்தின்போது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். குளிர் காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை அவர்கள் அணிய வேண்டும், நன்றாக குளிரைத் தடுக்கக்கூடிய ஆடைகளை அணிந்து, தலையையும் முகத்தையும் சூடாகவே வைத்திருக்க வேண்டும். சரியாக பாதுகாக்கப்படாவிட்டால், சிறிய அளவில் குளிருக்கு ஆளாவதும் கூட, ஏராளமான வெப்பத்தையும் ஆற்றலையும் இழக்க வைக்கக்கூடும்.
சிஓபிடியைக் கொண்ட நபர்கள் ஆண்டுதோறும், ஃப்ளூ மற்றும் நிமோனியா தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் மற்றும் ஜலதோஷம் பிடிக்காமல் காத்துக்கொள்ள நோய்பரவக்கூடிய வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் மற்றும் அதிக அளவில் நீர்மங்களை உட்கொள்ள வேண்டும். ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புகொள்வதைத் தவிர்ப்பதும், ஆபத்தைக் குறைக்கக்கூடும்.
குளிர்காலத்தின்போது, நல்லபடியாக உணர, சுவாசிக்கும் காற்றை சூடுபடுத்தக்கூடிய முகமூடியை அணியலாம். ஒரு முகமூடியானது, குளிர் காலநிலை ஆபத்துக்களிலிருந்து பெருமளவில் பாதுகாக்கக்கூடும்.

அறுவை சிகிச்சை

சிஓபிடியால் பாதிக்கப்பட்ட ஒரு சில நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சையானது சிலநேரங்களில் உதவக்கூடும். இயல்பான நுரையீரலை அழுத்தக்கூடிய, பெரிய அளவிலான காற்றுநிரம்பிய இடமான புல்லா என்பதை அறுவைசிகிச்சை மூலம் அகற்றும் புல்லக்டோமி என்னும் அறுவை சிகிச்சையாகும். நுரையீரல் கொள்ளளவு குறைத்தல் அறுவைசிகிச்சையும் இதேபோன்றதே. அதாவது, எம்பிசீமாவால் பாதிக்கப்பட்ட நுரையீரல் பகுதிகள் அகற்றப்பட்டு, மீதமுள்ள நுரையீரலானது நன்றாக விரிவடையுமாறும், நன்றாக இயங்குமாறும் மாற்றப்படுகிறது. மிகக்கடுமையான சிஓபிடிக்கு நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை சிலநேரங்களில் செய்யப்படுகிறது, குறிப்பாக இளவயது நபர்களுக்கு இது செய்யப்படுகிறது.

நோய் முன்கணிப்பு

சிஓபிடி நாளாக நாளாக தீவிரமடையக்கூடியது மற்றும், மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. நோய் தீவிரமடைவது நபருக்கு நபர் வேறுபடுகிறது. மோசமான நோய் முன்கணிப்பை ஏற்படுத்தும் காரணிகளாவன.
 • கடுமையான காற்றுப்பாதை தடை (குறைவான எஃப்ஈவி1)
 • மோசமான உடற்பயிற்சித் திறன்
 • சுவாசக் சிக்கல்
 • குறிப்பிடத்தக்க அளவு குறைந்த எடை அல்லது அதிக எடை
 • சுவாசமண்டல செயலிழப்பு அல்லது கோர் பல்மோனாலே போன்ற சிக்கல்கள் ஏற்படுதல்
 • தொடர்ச்சியான புகைப்பழக்கம்
 • அடிக்கடி நோய் தீவிரமடைதல்கள்

நோய் பரவல்

2004 -ஆம் ஆண்டில் தொடர்ச்சியான அடைப்பு நுரையீரல் நோயைக் கொண்ட 100000 நபர்களில் வாழ்நாள்.
அமெரிக்காவில், சிஓபிடியின் பாதிப்பு ஏறத்தாழ 20 பேருக்கு ஒருவர் அல்லது 5% என்ற வீதத்தில் உள்ளது, மொத்தமாக ஏறத்தாழ 13.5 மில்லியன் நபர்கள் அமெரிக்காவில் இந்நோயால் தாக்கப்பட்டுள்ளனர், அல்லது நோய் கண்டறியப்படாத நபர்களும் சேர்க்கப்பட்டால் 25 மில்லியன் நபர்கள் ஆவர்.

வரலாறு

சிஓபிடி முற்காலத்திலேயே இருந்து வந்தது, ஆனால் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருந்தது. போர்னெட் என்பவர் 1679 ஆம் ஆண்டில் பெருத்தநிலை நுரையீரல்கள் (voluminous lungs)” என்பதை விவரித்திருக்கிறார். 1769 -ஆம் ஆண்டில், ஜியோவன்னி மோர்காக்னி என்பவர் 19 நோயாளிகளுக்கு காற்றினால் நுரையீரல்கள் உப்பிய நிலையில் காணப்பட்டதை விவரித்திருந்தார். 1721 -ஆம் ஆண்டில் முதன்முதலாக, எம்பிசீமாவால் விரிவடைந்த நிலையிலுள்ள காற்றுப்பாதையானது ரூஷ் என்பவரால் விவரிக்கப்பட்டது மற்றும் வரைந்து காட்டப்பட்டது."History of pathologic descriptions of COPD" (PDF). மாத்யூ பெயில்லி என்பவர் ஒரு எம்பீசீமாட்டோஸ் நுரையீரலை 1789 -ஆம் ஆண்டில் வரைந்து காண்பித்தார், மற்றும் அந்நிலையின் ஆபத்தான பண்பையும் விளக்கினார். பாதாம் என்பவர் "கட்டாரா" என்ற சொல்மூலம் தொடர்ச்சியான சுவாசப்பாதை அழற்சியின் இருமல் மற்றும் சளியின் மீசுரப்பு ஆகியவற்றை 1814 -ஆம் ஆண்டில் விவரித்தார். தொடர்ச்சியான சுவாசப்பாதை அழற்சியானது மனிதரை முடக்கக்கூடிய ஒரு குறைபாடு என்பதைக் கண்டறிந்தார்.
ஸ்டெதஸ்கோப்பைக் கண்டுபிடித்த மருத்துவர் ரீனே லேன்னெக் என்பவர் அவருடைய புத்தகமான எ ட்ரீட்டைஸ் ஆன் தி டிசீஸஸ் ஆஃப் தி செஸ்ட் அண்ட் ஆஃப் தி மெடியேட் அஸ்குல்டேஷன் (A Treatise on the Diseases of the Chest and of Mediate Auscultation) (1837) என்பதில் "எம்பிசீமா" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார், ஒரு இறந்த உடலின் அறுவை ஆய்வின்போது மார்பைத் திறந்து பார்த்தபோது, சுருங்காத நிலை நுரையீரலைக் குறிப்பதற்காக இந்த சொல்லைப் பயன்படுத்தினார். முழுவதும் காற்றினால் நிரம்பியிருப்பதாலும், காற்றுப்பாதைகள் சளியினால் மூடப்பட்டிருப்பதாலும், அவை வழக்கமாக சுருங்குவதில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.
1842ஆம் ஆண்டில், ஜான் ஹட்சின்சன் என்பவர் ஸ்பைரோமீட்டர் என்பதைக் கண்டறிந்தார், இது நுரையீரலின் முதன்மை கொள்ளளவை அளவிட பயன்படக்கூடியக் கருவியாகும். ஆனாலும், அவருடைய ஸ்பைரோமீட்டர், கொள்ளளவை மட்டுமே கணக்கிடும், காற்றின் போக்கைக் கணக்கிடாது. டிஃபானவ் என்பவர் 1947 ஆம் ஆண்டிலும் கேன்ஸ்லர் என்பவர் 1950 மற்றும் 1951 ஆண்டுகளிலும், காற்றின் போக்கை அளவிடும் தத்துவத்தை விளக்கியுள்ளனர்.
தொடர்ச்சியான மூச்சுப்பாதை அழற்சி மற்றும் எம்பிசீமா ஆகியவை 1959 ஆம் ஆண்டில் நடந்த மருத்துவர்களின் சிபா கெஸ்ட் சிம்போசியத்தில் முறையாக வரையறுக்கப்பட்டன. சிஓபிடி என்ற சொல்லானது, 1965 -ஆம் ஆண்டு வில்லியம் பிரிஸ்கோ என்பவரால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இது வேறு அனைத்து பெயர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்த நோயைக் குறிப்பதற்கான விரும்பப்படும் பெயராக மாறிவிட்டது.

தொகுப்பு: திருவேங்கடம் முனுசாமி

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்