விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Wednesday, September 15, 2010

எயிட்சை பற்றி


உயிர்கொல்லி நோய் பற்றி
உணரா உள்ளங்களே
வாழ்க்கை வழிமாறி
வந்துவிட்ட இளைஞர்களே

விட்டில் பூச்சொன்று
வெளிச்சம் அதை தேடி
விளக்கில் மாட்டிகொண்டு
விழுந்ததை பார்த்தீரா

இன்பம் அதை தேடி
எங்கோ பறந்தோடி
துன்பம் என்பதனை
ஏற்றுக் கொள்வீரோ

ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உயர்ந்த பண்பாட்டினை
உடைத்த உங்களுக்கு
உயிர்கொல்லி நோய் வரலாம்
எயிட்ஸ் என்னும் பேய் வரலாம்

எயிட்சிற்கு மருந்தில்லை
இருந்தாலும் வருந்த வேண்டாம்
வருமுன் காப்பதுவே
தடுக்கும் மூப்பதுவே ...

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்