விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Saturday, September 4, 2010

உயிரித் தொழில் நுட்பம் - ஒர் அறிமுகம்
‘உயிரியல் முறைகள், உயிர்க் காரணிகள் ஆகியவற்றில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சில குறிப்பிட்ட பயன்களுக்காக பொருட்களை மாற்றிவிடவோ(அ) உருவாக்கவோ செய்தல் ஆகும்’. உயிரித் தொழில் நுட்பம் என்பது தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்காரணிகளான பாக்டீரியா முதலியவற்றைக் கொண்டு சில உயிரியல் முறைகளை மேற்கொள்ளுதல் ஆகும். பழங்களைப் பழுக்க வைத்தல், பாக்டீரியாவைக் கொண்டு மக்கச் செய்தல் ஆகியன மனிதனுக்குக் கிடைக்கும் பயன்கள் ஆகும்.

வரலாற்று அளவில் உயிரித் தொழில்நுட்பமானது, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண்மை தொழிற்சாலைகளில் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. சில தொழில்நுட்பங்கள் இவற்றில் மிகவும் பழமையானது. உதாரணமாக நொதித்தல் மூலம் நுண்ணுயிரிகளைக் கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பீர், ஒயின், பாலாடைக் கட்டி, பிரட் மற்றும் ‘யோகர்ட்’ முதலியன உற்பத்தி செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேற்கத்திய அறிவியல் ஆராய்ச்சியில் உட்கரு அமில மாற்றுத் தொழில்நுட்பமானது தற்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த உட்கரு அமில மாற்றுத் தொழிற்நுட்பம் மூலம், உட்கரு அமிலம் (அ) திசு வளர்ப்பு முறையின் மூலம். மரபணு மாற்றமானது தாவரங்களில் ஓம்புயிரிகளைக் கொண்டு (உ.தா. அக்ரோ பாக்டீரியம் ஆனது மாற்று உட்கரு அமிலம் மூலம் தேவையான காரணிக்கு மாற்றப்படுகின்றது.

நவீன உயிரியல் தொழில் நுட்பம் என்பது கீழ்கண்டவற்றைச் செயல்படுத்துதல் ஆகும்

•ஆய்வகத்தில் செய்யப்படும் நியூக்ளிக் அமில தொழில்நுட்பம், இதனுடன் உட்கரு அமிலம் மற்றும் நேரடியாக செல்லில் (அ) உயிரிகளில் நியூக்ளிக் அமிலத்தைச் செலுத்துதல்
•செல்லின் இணைவுகள், வகைப்பாட்டுக் குடும்பங்களில், இயற்கையாக உற்பத்தி செய்வதைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இவை, மரபுவழி பயிர் இனப்பெருக்கத்தில் இத்தொழில்நுட்பத்தில் செயல்படுத்துவதில்லை.
வாட்சன் மற்றும் கிரிக் பல ஆண்டுகளுக்கு முன்பு உட்கரு அமிலத்தின் வடிவத்தைக் கண்டறிந்தவுடன், நவீன உயிரித் தொழில்நுட்பமானது உருவானது. அனைத்து உயிர்ப்பொருட்களான தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றில் உள்ள உட்கரு அமிலமே மரபணுத் தகவல்களைக் கொண்டுள்ளன. இவை, எப்படி நாம் இருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது.

உட்கரு அமில வடிவம் கண்டறியப்பட்டவுடன், சில குணங்களான நமது தோலின் நிறம் மற்றும் சந்ததிக்கு சந்ததி பரவும் மரபணு நோய்கள் முதலியவற்றைப் பற்றி அறியப்பட்டது. செய்யப்படும் ஆய்வுகள் மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களும் சேர்ந்து நவீன உயிர்த் தொழில்நுட்பம் ஆகும்.

உயிர் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள்

நவீன உயிர்த் தொழில்நுட்பத்தின் முக்கியப் பயன்களில் சில :

•தாவர மற்றும் விலங்குப் பொருட்கள் மேம்படுத்தப்படுவதுடன், அதன் தரமும் உயர்த்தப்படுகிறது - வேளாண்மை உயிர் தொழில்நுட்பம்
•மேம்படுத்தப்பட்ட சில மருந்து வகைகள் (சில எதிர் உயிரிப் பொருள் மற்றும் இனக்கலப்பு மருந்துகள்) -மருத்துவ உயிர் தொழில்நுட்பம்
•உயிரியல் தீர்வு மூலமாக மண் மற்றும் நீரை சுத்தம் செய்தல் - சுற்றுச்சூழல் உயிர் தொழில்நுட்பம்
•தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்தல் - தொழிற்முறை உயிர் தொழில்நுட்பம்
வேளாண்மை உயிரித் தொழில்நுட்பம்

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் விவசாயத்தின் வருமானத்தை நம்பியே வாழ்கிறார்கள். முன்பு அதிகரித்து காணப்பட்ட உற்பத்தித் திறன், தற்போது உலக சராசரி விளைச்சலுக்கும் குறைவான அளவையே இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள். மேற்கண்ட காரணங்களால், தற்போது பெரும்பான்மை நிலத்தில், பிழைப்பு மட்ட விவசாயமே நடைபெற்று வருகிறது. எனவே இக்காரணங்களால் விளைச்சலை அதிகரிக்க தகுந்த இரகத்தினைக் கொண்ட, பிழைப்பு மட்ட விவசாயத்திற்கு மாற்றாக, செறிந்த வேளாண்மை சில சமயங்களில் செய்ய முடிவதில்லை. அவ்வாறு உருவாக்கப்படும் பயிரானது, குறைந்த நீரிலும், பூச்சி மற்றும் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் இருந்தால் மட்டுமே, விளைச்சல் நஷ்டம் குறையும். மரபு வழியில் செய்யும் பயிரை மேம்படுத்த, உருவாக்கப்படும் வகையினங்கள் உயிர் மற்றும் உயிரற்ற சூழலைத் தாங்கும்படி உருவாக்கவேண்டும். எப்படிப் பார்த்தாலும் இவற்றின் பயன்கள், பண்பகத் தொகுதி- கிடைக்கப்பெறாமை மற்றும் எதிர்ப்புத் திறன் நீங்கவிடுதல் இவைகளைப் பொறுத்து எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. பயிர் மரபணுப் பொறியியல் (அ) மூலக்கூறு குறியீடு மூலம் பயிர் இனப் பெருக்கம் - இவைகள் மூலம் பயிர் இனப் பெருக்கமானது அவற்றின் எல்லை வரைமுறைகளைக் கடந்து விட முடியும்.

உயிரித் தொழில்நுட்பம்
தாவர உயிரித் தொழில் நுட்பத்தின் அங்கங்கள்
பயிர்ப் பெருக்கத்தில் மூலக்கூறு குறியீடு மரபு வழிப்பயிர் பெருக்கத்தின் மூலம் புதிய இரகத்தினை உருவாக்க 10-15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் “மூலக்கூறு குறியீடு தேர்ந்தெடுத்தல்” மற்றும் “மரபு வழிப் பொறியியல்” தொழில்நுட்பத்தின் வாயிலாக புதிய இரகத்தினை உருவாக்கும் கால அளவு (7-10 வருடங்கள்) குறைகிறது. மூலக்கூறு குறியீடு பெருக்கம் மூலம் ஆற்றலை மேம்படுத்தி, வல்லுநர்கள் சரியான ஜீன் பொருத்தம் குறியீடு மூலம் குறிப்பிட்ட காரணிகளைத் தேர்ந்தெடுத்தல் பயிர்ப் பெருக்கத்தின் போது மேற்கொள்கிறார்கள்.
மூலக்கூறு குறியீடுகள் என்பன “ மரபியல் சார்ந்த அட்டைகள்” போன்று குறிப்பிட்ட இடத்தில் ஆகும். மரபியலில் வெளித்தோற்ற அமைப்பினை கண்டறியவும், காட்டவும் ஆகும். குறியீடுகள் என்பவை (உட்கரு அமிலப் பகுதிகள்) வேட்பு மரபணுக்கு அருகில் மற்றும் தேவைப்படும் காரணி / மரபணுக்கு அருகிலும் இருக்கக்கூடிய வகையில் இருப்பது மரபியல் இணைவு ஆகும். இவ்விணைவு ஆராய்ச்சியாளர்களுக்குக் குறிப்பிட்ட மரபணுவை உறுதி செய்து வருவதை உரைக்க பயன்படுகிறது.

மரபியல் இணைவு வரைபடம் உருவாக்குதலின் மூலம் ஆராயச்சியாளர்கள் மூலக்கூறு குறியீடுகள் இன இழையில் எங்கு உள்ளது என்பதை அறியவும், எவ்வாறு இணைந்துள்ளன என்பதையும் அறிய முடிகிறது. இணைவு வரைபடமானது “பண்பு சார்ந்த காரணிப் புள்ளி ” வரைபடமாகவும், கண்டறியவும் உதவும். இப்பண்பு சார்ந்த காரணப்புள்ளி குறிப்பிட்ட வெளித்தோற்றக் காரணிகளைக் கட்டுப்படுத்தவும் (அ) மூலக்கூறு குறியீட்டு இணைவுக் காரணிகளைச் சுட்டிக்காட்டவும் உதவுகிறது. மரபியல் வரைபடம் கொண்டு ஓர் சந்தையில் உள்ளது விழைவு மரபணு உள்ளதா அல்லது உட்கரு அமில எடுக்கப்பட்டு உற்பத்தி செய்ததா என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்ய உதவுகிறது. மேலும் வெளித் தோற்றப் பண்புகளைக் கொண்டு சந்ததிகளை உருவாக்கும் போது நேரம் குறைகிறது. குறியீடுகள் மேலும் விழைவு மரபணு மண்டலத்தில் இருந்து, பெற்றோரின் மரபணுவிடம் இருந்து பெறப்படும் மரபணுபைக் கண்காணிக்கவும், உதவும். இச்செயல்முறை பல “பண்ணு சார்ந்த காரணப்புள்ளி” யில் பல அளிக்கும் மரபணுவில் இருந்து ஒர மரபணு ஏற்றுக்கொள்ளும்படி செய்வது “ பண்பு சார்ந்த காரணப்புள்ளி பிரமீடு ”எனப்படும். (கூர்முனைக் கோபுரம்)

மரபியல் குறியீடுகளின் பயன்கள்

■மரபியல் வேற்றுமை மற்றும் விதைக் கருவூலக் குணங்களை மதிப்பிடவும்.
■பயிர் இரகத்தில் மூலக்கூறு விரல் பதிவு தொழில்நுட்பம் பயன்படுத்துதல்
■ஒற்றை மரபணு மற்றும் பண்பு சார்ந்த காரணப் புள்ளிணைத் தேர்ந்தெடுத்தல்.
பயனுள்ள வேட்பு மரபணுவின் வரிசையைக் கண்டறியவும் உதவுகிறது.
மரபணு மாற்றம்

உண்மையில் நெல் உற்பத்தியில் நாம் தன்னிறைவை அடைந்திருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக உணவு உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இன்றைய ஆராய்ச்சி தான் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் ஏற்படும் நெல்லின் தேவைக்கு உதவு கோலாகும். நாம் உணவு உற்பத்தியில் இன்னும் 215 மில்லியன் டன்களைத் தாண்டவில்லை. 2015 ல் உணவு தானியங்களின் தேவை 2040 மில்லியன் டன்களாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தியை பெருக்க அதிக விளைச்சல் தரக்கூடிய மற்றும் பூச்சி, நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட புதிய நெல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டுக்கள் தேவைப்படுகின்றன. இதற்கு உயிரியல் தொழில் நுட்பத்தின் வாயிலாக மரபணு மாற்றம் ஒரு முக்கியமான கருவியாக அடைந்துள்ளது.

பி.டி.புரதமானது சாகுபடி நிலத்திலிருந்து எடுக்கப்பட்டது தான். எனவே, மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது ஆராய்ச்சியின் வாயிலாகக் கிடைத்துள்ள உண்மை. இப்புரதம் குறிப்பிட்ட பூச்சிகளின் ஜீரண மண்டலத்தை மட்டும் பாதிக்கும். அது மற்ற உயிரினங்களுக்கோ, கால் நடைகளுக்கோ மனிதர்களுக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மேலும் பி.டி.நெல்லில் உள்ள அனைத்து சத்துகளும் சாதாரண நெல்லில் என்ன அளவு இருக்கிறதோ அதே அளவுதான் உள்ளது. பி.டி.நெல்லில் நச்சுத் தன்மை உள்ளதா, ஒவ்வாமை (அலர்ஜி) உள்ளதா என்பதையும் மாதிரி விலங்குகளில (டெஸ்ட் அனிமல்ஸ்) பரிசோதித்து பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பிறகே மத்திய அரசு இந்த நெல்லை சாகுபடிக்கு பரிந்துரை செய்கிறது.
உணவுப் பயிர்களான மக்காச்சோளமும், சோயாவும் அதிக அளவில் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மரபணு மாற்றிய மக்காச்சோளமும், சோயாவும் அதில் அடங்கும். இவ்வகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் நாடுகளில் ஏற்றுமதி பாதித்ததாக தெரியவில்லை. ஐரோப்பாவில் மட்டுமே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதில்லை. ஏனெனில், ஐரோப்பாவைப் பொறுத்தவரை உணவுப் பாதுகாப்பு (Food security) ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக இல்லை. மற்ற நாடுகளுக்கு இது பொருந்தாது.

1 comment:

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்