விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Wednesday, August 25, 2010

ஓரிரவு

புதிய பிரதேசம்
நிலவை தவிர
என்னோடு வரும்
பழக்கமில்லா முகங்கள்

சாலையிலேயே
இரவை எரிக்கும்
குளிர்ச்சியான விளக்குகள்
என் முன்னே
அசைந்தாடிய படியே
ஒரு தேவதை!

இயற்கையாய்
இத்தனை ஆழ
கருமையை கண்டதில்லை...
கருப்பு சாயத்தில்
மூழ்கிருந்த
அவள்
பின்னழகு கூந்தல்!

தேவதை திரும்பியது
சற்று தடுமாற்றம் எனக்கு
விளக்கிலிருந்து ஒளி தெரிகிறதா
இல்லை
அவளிடமிருந்து
விளக்கெரிகிறதா?
கண்டுபிடித்துவிட்டேன்
பவுடரில் மிதக்கும்
அவள் முகத்தை...

இரத்தக்கரையாய்
அவள் இதழ்களில்
படிந்திருந்தது
சிவப்பு சாயம்!

ஓரளவு உடலை மறைக்கும்
சருகு சேலையில்
முகம்பார்க்க முடியா கண்ணாடிகள்

வாகன ஓசையிலும்
ஒலி முத்துகளை உதிர்த்து
காதுகளை பிளக்கும்
கொலுசு சத்தம்...

தன்னை சுமக்கும்
உயரமான காலணிகளை
சுமந்தவண்ணம்
நளினமாய் நடந்தாள்...

இடைமறித்தவனாய்
இரு சக்கர ஆசாமி...
செயற்கை புன்னகையோடு
இருவரும் ஒன்றாய்
கடற்கரையை நோக்கி...

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்