விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Wednesday, July 14, 2010

கண்ணனின் கவிதைகள்
ஏக்கம்
வளரப்புத் தொட்டில்
தவியாய் தவிக்கிறது
ஆண் சிசுவிற்காக..!
மறவாத மக்கள் !
என்
கிராமத்து மக்கள்
கள்ளிச் செடியை
மறந்துவிட்டார்கள்
ஆனாலென்னவோ?
இன்னும்
வரதட்சனையெனும்
விஷ விருட்சத்தை
மறக்காமலே...!
வெட்டியான் வீடு
தினம்
தினம்
பிணங்களை
எரிக்கும்
அவன் வீட்டிலும்
எரிகிறது
ஓரிரு நாட்கள்
அடுப்பு !
கைம் பெண்கள் !
உதிர்வுக்காக
ஏங்கும் மலர்கள்
மரணத்தில் அல்ல
மணப்பந்தலில் !

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்