விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Thursday, June 3, 2010

கம்புசாகுபடி

பருவம்
வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவ மழையை ஒட்டி விதைப்பு செய்யலாம். கராசரி மழையளவு 450-500 மி.மீட்டர் உள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சிதாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச் சேமித்து மண் ஈரம் காக்க ஆழச்சால் அகலப்படுத்தி, சம உயர வரப்பு, சமதள சாகுபடி நிலப்போர்வை அமைத்தல் களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
விதையும் விதைப்பும்
விதை அளவு : எக்டருக்கு 10 கிலோ
இடைவெளி: 22.5 ஒ 10 செ.மீ அல்லது 30 ஒ 7.5 செ.மீ
விதைநேர்த்தி
விதைகளை கடினப்படுத்துதல் : வறட்சியைத் தாங்கி வளர, விதைகளைக் கடினப்படுத்தி பின்பு விதைக்கவேண்டும். பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து, நிழலில் தன் எடைக்கு உலர்த்திய பின் விதைப்பதினால் பயிர் வறட்சியை தாங்கி வளரும்.
நுண்ணுயிர் உரங்கள் விதைநேர்த்தி
ஒரு எக்டருக்குத் தேவையான விதைகள 25 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் விண்ணிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து பயிர்களுக்கு அளிக்கலாம். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு எக்டருக்கு 10 பொட்டலம் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் (2000 கிராம்) எஸ்பர்ஜில்லஸ் சுமாமரி அல்லது 20 பொட்டலம் (4000 கிராம், எக்டர்) அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழு உரம் கலந்து தூவவேண்டும்.
பயிர் மேலாண்மை
நிலம்
சோளம் இறவையில் மானாவாரியிலும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றது. எனினும் இரு மண் பாங்கான நிலங்களிலும், களி கலந்த வண்டல் நிலங்களிலும் நன்கு பயிராகின்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை.
விதைத்தேர்வும் விதையளவும்
நல்ல தரமான விதைகளை நோய் மற்றும் பூச்சி தாக்காத பயிர்களிலிருந்து சேகரிக்கவேண்டும். இறவையில் சோளம் நேரடி விதைப்பு மற்றும் நாற்றுவிட்டு நடுதல் மூலம் பயிர் செய்யப்படுகின்றது.
விதையளவு (கிலோ.எக்டர்)
இறவையில் நாற்றுவிட்டு நடவு செய்தல்
நாற்றுவிட்டு நடவு நடுவதால் ஏற்படும் நன்மைகள்
 • வயலில் நேரடி விதைப்பை விட 10 நாட்கள் வயது குறையும்.
 • நேரடியாக விதைக்கப்பட்ட சோளத்தை முதல் 3 வாரங்களில் தாக்கும் எளிதில் கட்டுப்படுத்த முடியாத குருத்து ஈ என்ற பூச்சியை நாற்றாங்காலில் கட்டுப்படுத்தலாம்.
 • வெளிறிய தோற்றம் கொண்ட மற்றும் அடிச்சாம்பல் நோய் தாக்கிய அறிகுறிகளைக் கொண்ட நாற்றுக்களை அகற்றிவிடலாம். இதனால் வயலில் அடிச்சாம்பல் நோய் தாக்குதல் குறைவாக இருக்கும்.
 • நல்ல நாற்றுக்களை வயலில் நடுவதற்குப் பயன்படுத்தப்படுவதால் பயிர் எண்ணிக்கையை சரியாகப் பராமரிக்கலாம்.
 • விதை அளவை எக்டருக்கு 2.5 கிலோ வரை குறைக்கலாம்.
பயிர் எண்ணிக்கை
ஒரு குத்தில் வாளிப்பான ஒரு நாற்று மட்டும் வளரவிடவேண்டும். 150 செடிகள் 10 சதுர மீட்டர் என்ற எண்ணிக்கையில் பராமரிக்கவேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்
நாற்றாங்கால் தயாரித்தல்
ஒரு எக்டருக்கு தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 7.5 சென்ட் (300 ச.மீ) தண்ணீர் தேங்காத நிலத்தைத் தேர்வு செய்துகொள்ளவேண்டும்.
நாற்றாங்காலுக்கு எருவிடுதல்
நாற்றாங்காலில் 750 கிலோ மக்கிய தொழு உரத்தை சீராக பரப்பி இரும்பு கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை உழவேண்டும். நாற்றாங்காலில் விதைத்த பின்பு 500 கிலோ மக்கிய தொழு உரத்தையிட்டு விதையை மூடவேண்டும்.
மேடைப்பாத்தி அமைத்தல்
2 மீட்டர், 1.5 மீட்டர் அளவுள்ள மேடைப்பாத்திக்ள அமைக்கவேண்டும். பாத்திகளுக்கு இடையே நீர் பாய்ச்ச ஏதுவாக 30 செ.மீ இடைவெளியும் 15 செ.மீ ஆழத்திற்கும் வாய்க்கால் அமைக்கவேண்டும்.
விதைநேர்த்தி
விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை திரம் அல்லது கேப்டான் அல்லது கார்பென்டாசிம் 2 கிராம், கிலோ கொண்டு விதைநேர்த்தி செய்யவேண்டும்.
நுண்ணுயிர் கொண்டு விதைநேர்த்தி செய்ய எக்டருக்கு 3 பொட்டலம் (600 கிராம்) அஸோஸ்பைரில்லம், 3 பொட்டலம் (600 கிராம்), பாஸ்போபாக்டீரியம் அல்லது 6 பொட்டலம் (1200 கிராம்) அஸோபாஸ் கொண்ட விதையைக் கலக்கவும்.
விதைப்பு
மேடைப்பாத்தியில் கைவிரல் அல்லது குச்சி கொண்டு ஒரு செ.மீ அளவுக்கு மண்ணில் கோடுகள் கிழித்து, 7.5 கிலோ விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை சீராக அதன்மேல் தூவவேண்டும். பின்பு நன்கு பொடியாக்கப்பட்ட 500 கிலோ தொழு உரத்தைக் கொண்டு விதைகளை மூடி நீர்ப்பாய்ச்சவேண்டும்.
நீர் நிர்வாகம் (நாற்றாங்காலுக்கு)
மண்ணின் தன்மைக்கேற்ப கீழ்க்கண்டவாறு நீர்ப்பாய்ச்சவேண்டும்.
குறிப்பு: நாற்றாங்காலில் வெடிப்பு ஏற்படாத வகையில் நீர் நிர்வாகம் அமையவேண்டும். 18 நாட்களுக்க மேல் வயதான நாற்றுக்களை நடவு வயலில் நடுவதால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இறவைப் பயிருக்கு நிலம் தயாரித்தல்
நடவு வயல் தயாரிப்பு
நிலத்தை ஒன்று அல்லது இருமுறை இரும்புக் கலப்பை கொண்டு உழவேண்டும. நிலத்தின் கடின அடுக்கு இருந்தால் உழிக் கலப்பைக் கொண்டு 0.5 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ ஆழத்தில் உழவேண்டும். பிறகு சட்டிக்கலப்பைக் கொண்டு ஒரு முறையும் கொக்கிக் கலப்பை கொண்டு இருமுறையும் உழுவதால் சோளத்தின் மகசூலும் அதற்குப் பிறகு பயிரிடப்படும் உளுந்து மற்றும் நிலக்கடலையின் மகசூலும் அதிகரிக்கின்றது. கடின அடுக்கு இருக்கும் நிலத்தில் ஒவ்வொரு வருடமும் பயிர்த்திட்டம் ஆரம்பிக்கும் முன்பு உழிக்கலப்பை கொண்டு உழுவதால் பயிர் நன்கு மண்ணில் முளைத்து வர ஏதுவான சூழல் உருவாகின்றது.
எரு இடுதல்
மக்கிய தொழு உரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார்க் கழிவுடன் 10 பொட்டலம் (2 கிலோ)அசோஸ்பைரில்லம் மேலும் 10 பொட்டலம் (2 கிலோ.எக்டர்) பாஸ்போபேக்டீரியம் அல்லது 20 பொட்டலம் (4 கிலோ) அஸோபாஸ் இட்டு நாட்டுக்கலப்பைக் கொண்டு உழுது நன்கு மண்ணுடன் கலக்கவேண்டும். மண்ணின் பெளதீகத் தன்மை பெருக்க, மற்றும் மணிகள் அதிகம் பிடிக்க ஒரு எக்டருக்கு ஐந்து டன் மக்கிய கோழி உரம் இடவேண்டும்.
பார்கள் அமைத்தல்
பார் பிடிக்கும் கருவியைப் பயன்படுத்தி 45 செ.மீ இடைவெளியில் 6 மீட்டர் நீளத்தில் பார் அமைத்து இடையிடையே தண்ணீர் பாய்ச்சும் வாய்க்கால் அமைக்கவேண்டும். அல்லது நீர் வரத்தைப் பொறுத்து 10 அல்லது 20 சதுர மீட்டரில் பாத்தியை அமைக்கவேண்டும்.
உர நிர்வாகம்
இராசயன உரங்களை மண் பரிசோதனை சிபாரிசுப்படி இடவேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரைப்படி 904545 (கிலோ.எக்டர்) தழை, மணி, சாம்பல்சத்து என்ற அளவில் இடவேண்டும். அசோஸ்பைரில்லம் அடியுரமாக இடப்பட்ட வயலில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் 75 சதம் அடியுரமாக இட்டால் போதுமானது.
நாற்று நடவுக்கு
தழைச்சத்து பாதியளவிலும் மணி மற்றும் சாம்பல் சத்து உரத்தை முழு அளவிலும் நடவுக்கு முன்பு அடியுரமாக இடவேண்டும். 5 செ.மீ ஆழமுள்ள கோடு அமைத்து உரமிட்டு பின் மண்ணால் மூடவேண்டும்.
நேரடி விதைப்பு
தழைச்சத்து பாதியளவிலும் மணி மற்றம் சாம்பல் சத்து உரத்தை முழு அளவிலும் விதைக்கும் முன்பு அடியுரமாக இடவேண்டும். பாத்தயில் விதைப்பதாக இருந்தால் 45 செ.மீ இடைவெளியில் 5 செ.மீ ஆழத்திற்கு கோடு கிழித்து அதில் இராசயன உரங்களையிட்டு பின் மண்ணால் மூடவேண்டும். சோளத்தில் உளுந்து அல்லது பாசிப்பயறு அல்லது தட்டைப்பயறு ஊடுபயிராக பயிர் செய்யும் போது 30 செ.மீ இடைவெளியில் 5 செ.மீ ஆழத்தில் கோடு கிழித்து சோளம் விதைக்கும் இரண்டிரண்டு கோடுகளில் உரங்களையிட்டு மண்ணால் மூடவேண்டும்.
நுண்ணூட்டச்சத்து
தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையில் தயாரிக்கப்பட்ட நுண்ணுட்டச்சத்து 12.5 கிலோவை மணலுடன் கலந்து 50 கிலோ அளவில் ஒரு எக்டர் நிலத்தில் இடவேண்டும்.
துத்தநாகம் பற்றாக்குறையுள்ள நிலத்தில் 25 கிலோ துத்தநாக சல்பேட்டை மணலுடன் கலந்து 50 கிலோ அளவில் ஒரு எக்டர் நிலத்தில் இடவேண்டும். இரும்புச்சத்து பற்றாக்குறையுள்ள நிலத்தில் 50 கிலோ இரும்பு சல்பேட்டை 12.5 டன் தொழு உரத்துடன கலந்து ஒரு எக்டர் நிலத்தில் இடவேண்டும்.
நடவு வயலில் மேலாண்மை
நாற்றுவிட்டு நடுதல்
15 முதல் 18 நாட்கள் வயதான நாற்றுக்களை நடவேண்டும். 5 பொட்டலம் (1000 கிராம், எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 5 பொட்டலம் (1000 கிராம்.எக்டர்) பாஸ்போபாக்டீரியம் அல்லது 10 பொட்டலம் (2000 கிராம்.எக்டர்) அஸோபாஸ் நுண்ணுயிர் உரத்தை 40 லிட்டர் நீரில் கரைத்து கலவையில் நாற்றின் வேர்களை 15-30 நிமிடங்கள் மூழ்க வைத்துப்பின் நடவேண்டும். நாற்றுக்களின் இடையே 15 நெ.மீ இடைவெளி இருக்குமாறு நடவேண்டும்.
நேரடி விதைப்பு
சோளம தனிப்பயிராக பயிர் செய்யும்போது 10 கிலோ, எக்டர் என்றளவில் விதையளவு உபயோகிக்கவேண்டும். சோளத்துடன் பயறுவகைகளை ஊடுபயிராக பயிர் செய்யும் போது சோளம் விதையளவு 10 கிலோ, எக்டர் மற்றும் பயறுவகைகள் 10 கிலோஈ எக்டர் என்ற வகையில் விதைக்கவேண்டும். சோள விதையை 2 செ.மீ ஆழத்தில் 15 செ.மீ விதைக்கு விதை இடைவெளி இருக்குமாறு விதைக்கவேண்டும்.
சோளத்தில் பயறுவகைகளை ஊடுபயிர் செய்யும் போது வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு விதைக்கவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
களை நிர்வாகம்
விதைத்த மூன்றாம் நாள் அட்ரசன் 500 கிராம் களைக்கொல்லியை 900 லிட்டர் தண்ணிரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். ஊடுபயிராக பயறு வகைப் பயிர்களை பயிர் செய்திருந்தால் அட்ரசின் உபயோகப்படுத்தக்கூடாது.
விதைத்த 15,30 ஆம் நர்களிலும் நடவு செய்த 10,35 வது நாட்களிலும் களை எடுக்கவேண்டும் அல்லது சோளம் தனிப்பயிராக அருந்தால் அட்ரசின் (500 கிராம், எக்டர்) ஊடுபயிர் சாகுபடி செய்தால் பென்டிமெத்தலின் என்ற களைக் கொல்லியைப் பயன்படுத்தலாம்.
மேலுரமிடுதல்
நடவு வயலுக்கு நட்ட 15 மற்றும் 30ம் நாளில் மீதயுள்ள 50 சதம் தழைச்சத்தை சரிசமமாக பிரித்து மேலுரமாக இடவேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு முறையும், பின்பு நான்காம் நாளும் அதன் பின்னர் 8-10 நாட்களுக்கு ஒரு முறையும் நிலம் மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர்ப்பாய்ச்சவேண்டும்.
அறுவடை
 • பயிரின் சராசரி வயதைக் கொண்டு சரிபார்க்கவும். பயிர் அறுவடைக்குத் தயாரானவுடன், இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும்.
 • தானியங்கள் கடினமானதாக இருக்கும்.
 • இந்த நிலையில் கதிர்களை மட்டும் அறுவடை செய்யவும்.
 • ஒரு வாரம் கழித்து தட்டையை வெட்டிக் காயவைத்தபின் சேமித்து வைக்கவும்.
 • உயரமான இரகமாக இருந்தால், நிலத்தில் இருந்து 10-15 செ.மீ உயரத்தில் அறுவடை செய்யவும். பின்னர் கதிர்களைப் பிரித்ததும் தட்டையை சேமிக்கலாம்.
 • கதிர்களைக் காயவைக்கவும்.
  • தானியங்களை விசை கதிரடிக்கான் கொண்டு அல்லது கல் உருளை அல்லது மாடுகளை நன்கு பரப்பிய கதிர்களின் மேல் செலுத்துவதன் மூலம் பிரித்தெடுக்கலாம்.

No comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்